ஆளுமைமிக்கதோர் சமுதாயத்தின் உருவாக்கத்திற்குத் திறன்மிக்க சேவையாளர்களின் தேவை இன்றியமையாததாகும். அவ்வாறான திறன்களை விருத்தி செய்யுமுகமாக விவேகானந்த குடும்பத்திலுள்ள சேவையாளர்களுக்கான இயலுமை விருத்திப் பயிற்சிப்பட்டறையானது இன்றைய தினம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட சேவையாளர்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். கிழக்கு திறந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கான விரிவுரையாளர் திரு.ஞானரெட்ணம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு பயிற்சியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்து சென்றார். வாழ்க்கை திறன்கள் பற்றிய சிறப்பான தெளிவூட்டலுடன் வாழ்க்கை திறன்களை பிரயோகிக்கும் முறைகள் பற்றியும் திறன்களின் வகைகள், நேர முகாமைத்துவம், உடன்பாடான மனப்பாங்கு போன்ற பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட செயலமர்வாக இது இடம்பெற்றது.
பயனுள்ள வகையில் செயலமர்வை முன்னெடுத்துச் சென்ற திரு.ஞானரெட்ணம் அவர்களுக்கு விவேகானந்த குடும்பத்தினர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிய விவேகானந்த குடும்பத்தின் சேவையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.