முறையானதோர் சமுதாயத்தின் நிலைத்திருப்பிற்கு சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்ட ஓர் தலைவரின் வழிகாட்டல் அவசியமாகின்றது.
அவ்வாறானதொரு சிறந்த தலைவரின் உருவாக்கமானது பல பயிற்சிகள், அனுபவங்கள், வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும்.
அதற்கிணங்க, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஓர் திட்டமாக எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தில் தலைமைத்துவப் பயிற்சியானது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் வளவாளராகப் பயிற்சியை நடாத்தியதுடன் தெரிவு செய்யப்பட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுய ஏற்பு, தொழில் இலக்கு போன்ற தொனிப்பொருளில் செயலமர்வு நடாத்தப்பட்டதோடு பயிற்சிகளூடான தெளிவூட்டலும் எமது பணிப்பாளரால் வழங்கப்பட்டது.
பயனுள்ள வகையில் செயலமர்வை முன்னெடுத்த எமது பணிப்பாளருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு இச் செயலமர்வை ஏற்பாடு செய்த விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருக்கு எமது சேவையாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.