கல்விக்கான உதவி திட்டத்தில் மேலும் 5 புதிய மாணவர்கள்..

எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாட்டின் முக்கிய செயற்பாடான வறுமை நிலையில் உள்ள கல்வி கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு மாணவர் ஒருவரை பொறுப்பெடுங்கள் என்னும் செயற்பாட்டிற்கு அமைவாக அவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு மாதாந்த உதவித்தொகையினை வழங்கி வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கிவிடாமலிருக்கும் எம்மாலான இந்த செயற்பாட்டிற்கு ஆணிவேராக கிட்டத்தட்ட 70 மாணவர்களை தனது உறவுகள், நண்பர்கள் உதவிமூலம் பெறுப்பெடுத்து கடந்த 5 வருடங்களிற்கு மேலாக எம்முடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் கனடாவில் உள்ள திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் ஊடாக தற்போது இன்னும் 5 மாணவர்கள் பொறுப்பொடுக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக எமது நன்கொடை உறவுகளின் உதவி மூலமாக தற்போது 117 மாணவர்கள் இத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இவர்களின் கல்விக்கு ஒளியேற்றி வைக்கும் அனைத்து நல் உள்ளங்களிற்கும் நன்றிகள் கோடி…

மாணவர்கள் விபரம் :
மட்/கரடியனாறு மகா வித்தியாலயம் மற்றும் மட்/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரப்பிரிவில் கல்வி பயிலும்
1. அ.துர்சிக்கா (வணிகப்பிரிவு)
2. இ.ரஜிதா (கலைப்பிரிவு)
3. சி.சிவதர்சினி (கலைப்பிரவு)
4. செ.விஸ்வேணிக்கா (வணிகப்பிரிவு)
5. ச.அட்சையா (கலைப்பிரவு)

ஏன் இந்த மாணவர்கள் பொறுப்பெடுக்கப்படுகின்றனர்?
எதற்காக அவர்களிற்கு இந்த மாதாந்த உதவி?

இவ்வாறான மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கு எம்மாலான பங்களிப்பினை செய்ய மாணவர் ஒருவரை பொறுப்பெடுத்து அவர்களிற்கான மாதாந்த கல்விக்கான உதவியினை வழங்க முன்வரும் எமது அறக்கட்டளையின் உறவுகள் தொடர்புகொள்ளவும். அனைத்து விபரங்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
kpratheeswaran@vcf.lk
www.vcf.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *