ஆலம் விதையென வேரூன்றி இன்று ஆயிரம் விழுதுகளைத் தன்னகத்தே கொண்ட விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை செவ்வனே கடக்கின்றது.
அதேவேளை விழுதுகளில் ஒரு நினைவாக எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன்றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக பாடசாலை மற்றும் மேலதிக கல்விசார் நடவடிக்கைகளிற்கு அதிக தூரம் செல்லவேண்டியுள்ள வறுமை நிலையில் உள்ள மாணவர்களிற்கு அவர்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு துவிச்சரக்கர வண்டிகள் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளும் முகமாக முதற்கட்டமாக மாணவி செல்வி.சுகிர்தா ரவிச்சந்திரன் அவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது இடம்பெற்றது.
இந்த திட்டதிற்கு 5 பேருக்கான துவிச்சரக்கர வண்டிகளுக்கான நன்கொடை அனுசரணையை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் திருமதி.கணேசராணி ரவீந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார். அத்தோடு எமது பல்வேறு விதமான செயற்பாடுகளிற்கான நிதியினையும் வழங்கி எமது தொடர் செயற்பாடுகளுடன் இணைந்துள்ளார். அவரின் செயற்பாடுகளை இந்த ஒரு மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றோம். எனவே, எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக திருமதி.கணேசராணி ரவீந்திரன் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.