
வலுவூட்டலை நோக்கிய வாழ்வாதார மேம்பாட்டிற்கு..
எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக கல்வியை மட்டுமல்லாது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கான வலுவூட்டலை வழங்குவதே எமது நோக்கமாகும். அதனடிப்படையில் எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டற் செயற்பாட்டினூடாகத் தெரிவு செய்யப்பட்டு எமது அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவி ஒருவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி எமது நன்கொடையாளரான திரு. ரகுபதி நடராஜா அவர்களினால் எமது அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அவர்கள் வாழ்வாதாரமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதையடுத்து அதன் மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியைப்…