
அவர்களின் எதிர்காலம் அவர்களிடமே….!
எமது அறக்கட்டளையினூடாக கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அவர்களின் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் பயிலும் 20 பெண்களுக்கான விசேட தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி செயலமர்வானது மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பின் கீழ் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும்…