Admin

இல்லங்களில் வாழும் சிறுமிகளின் உள்ளங்களிலும் ஒளியேற்ற

பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் மரபிற்கு ஏற்ப தமிழர் வழி வந்த பண்டிகையாம் தீபாவளிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறே அதிகாலையில் நீராடி புத்தாடை அணிந்து இல்லங்களில் விளக்கேற்றி ஒளி பெருக்கி தீபத்திருநாளை கொண்டாடுவது எமது வழக்கம். அந்த வகையில், அனைவர்க்கும் புத்தாடை எனும் கருப்பொருளில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், ஜீவானந்தா மகளிர் இல்லம், வாழும் கலை நம்பிக்கை நிதியம் ஆகிய எமது திட்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு தலா 5000 LKR வீதம்…

மேலும் படிக்க

நாளைய சிந்தனையாளர்களுக்குஇன்று ஓர் களம்

சிறு வயது முதல் ஒரு மனிதனிடத்தில் விதைக்கப்படும் உயரிய சிந்தனையே நாளைய நாட்டின் சிறந்த பிரஜைகளை உருவாக்க வல்லது. அதனடிப்படையில் மாணவர்களை இன்றே நேரிய சிந்தனையாளர்களாகக் கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 ஐச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத்திறன் பயிற்சி பெற்ற சேவையாளர்களால் நடாத்தப்பட்டது. நேர்மறை எண்ணங்கள் நமது வாழ்வில் எவ்வாறு தாக்கம்…

மேலும் படிக்க

மாதம் ஒரு களம்…

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கான வாழ்வியல் திறன்களையும் வழங்கும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்திற்குச் சென்று அங்கு குழு மேம்பாடு எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சி நடாத்தப்பட்டது. இவ்வாறான குழு மேம்பாடு செயற்பாடுகளை மேற்கொண்டு இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல்களுக்கு எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும். இச் செயற்பாட்டிற்காக…

மேலும் படிக்க