
சாதனைகளுக்கு உணர்வுகளே பாரிய தடை.
திறமைகளும் ஆற்றல்களும் இருந்தாலும் கூட வெளிக்கொணர்வதற்கான தைரியம் இன்மையே இன்றைய கால மாணவ சமுதாயத்தினரின் பாரிய சவாலாக அமைகின்றது. ஆதலால், சிறுவயது முதல் இளம் தலைமுறையினருக்கு வாழ்வியலை எடுத்துரைப்பதன் மூலம் எண்ணற்ற சாதனைகளுக்கு இயல்பானவர்களாக அவர்களை மாற்ற முடியும். அந்தவகையில், பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் பயிலும் மாணவிகளுக்கான ஒருநாள் வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைதிறன் பயிற்சி பெற்ற சேவையாளர் குழுவினரால் நடாத்தப்பட்டது. தரம் 9 மற்றும் தரம் 10 ஐச் சேர்ந்த…