Admin

கல்வி ஏக்கங்களுடன் சிறுவர் காப்பகங்களில்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்டபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10…

மேலும் படிக்க

தற்போதைய இளைஞர்களும் செயற்பாடும்

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் எமது விவேகானந்த இளைஞர் கழகத்தினரால் ஜீவானந்தா இல்லத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களும் ஜீவானந்தா இல்லத்தில் வசிக்கும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களிடைய சமூகம் பற்றிய சிந்தனையினை உருவாக்கவதுடன், மாணவர்களிடையே சூழலை சுத்தம் செய்வதன் அவசியம்…

மேலும் படிக்க

பெற்றோருக்கான தெளிவூட்டல்..!!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வலுவூட்டலை வழங்கும் வண்ணம் சிறுவர் பராமரிப்பு திட்டம் எனும் தொனிப் பொருளில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பாலர் பாடசாலைகளுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் பயிலும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. எமது சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டில் எமது திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாது அவர்களுக்கான எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டமை சிறப்பானதாகும். இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எம்முடன் இணைந்து செயலாற்றிக்…

மேலும் படிக்க

சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தாடைகள்

எமது திட்டங்களினுடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் இல்லங்களில் வாழும் மாணவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடினோம். அந்த வகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது சாரதா நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கான புத்தாடைகள் வழங்கப்பட்டு தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இச் செயற்பாட்டை நாம் முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருந்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நன்கொடை வழங்கியஎமது அறக்கட்டளை உறவுகளின் விபரம் வருமாறு = எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு,…

மேலும் படிக்க

அவர்கள் கிராமத்தை அவர்களே அபிவிருத்தி செய்ய

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் மாவிலங்ககத்துறையில் கிராம அபிவிருத்திப் படையணியை உருவாக்குவதற்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை மாவிலங்கத்துறை கிராம சேவகர் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சிப் பட்டறையில் பற்றிமாபுரம், மண்முனை மற்றும் மாவிலங்கத்துறையேன மூன்று கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு தங்கள் கிராமங்களில் உள்ள பின்னடைவுகள் மற்றும் நடைமுறை பிரச்சினைகள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. தனிமனித இலக்கு மற்றும் கிராமத்தின் இலக்கு பற்றியும் ஆராயப்பட்டதோடு சிறு செயற்பாடுகள் மூலமும் தெளிவூட்டப்பட்டது….

மேலும் படிக்க

பாலர் பாடசாலையினருக்கான சீருடைகள்

எமது சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினுள் அடங்கும் 5 பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 125 சிறுவர்களுக்கான சீருடைகள் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் வழங்கிவைக்கப்பட்டது. எமது பாலர் பாடசாலைகளும் இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய எமது அறக்கட்டளை உறவுகளும் வருமாறு = இச்செயற்பாட்டிற்காக அனுசரணை வழங்கிய எமது உறவுகளுக்கும் இச் செயற்பாட்டின் மேலதிகமான பங்களிப்பை எமது அறக்கட்டளையினூடாக வழங்கிய திரு.வலன் சிவராஜா மற்றும்…

மேலும் படிக்க

எழுத்துக்கள் தாண்டிய சாதனைகளுக்கு

முறையான கல்வி என்பது நூலறிவு மாத்திரமின்றி விளையாட்டுக்கள் வெளிக்கள செயற்பாடுகள் என பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது. அந்த வகையில், மாணவர்களின் கல்வியைத் தாண்டி அவர்களின் தேவைப்பாடுகளையும் கருத்திற்கொள்வது எமது கடமையாகும். அதன் பிரகாரம், தேசிய ரீதியாக பல்கலைக்கழகங்களிடையே நடைபெறும் வலைப்பந்து போட்டியில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான சீருடைகளுக்கான கோரிக்கைக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது கிழக்கு பல்கலைகக்கழக வலைப்பந்தாட்க் குழு மாணவர்களுக்கான சீருடைகள் எமது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையிலே எமது கோரிக்கையினை…

மேலும் படிக்க

விதை

United board of Christian Higher Education in Asia இன் ஒருங்கிணைப்பினூடாக இந்திய சமுதாய கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தினால் (ICRDCE) மட்டக்களப்பிலிருந்து 3 தொழிற்பயிற்சி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமுதாய கல்லூரி முறைமை மற்றும் வாழ்வியல் பயிற்றுவிக்கும் 2 வாரகால TOT பயிற்சி பட்டறைக்கு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் இந்தியா சென்று வாழ்க்கைத் திறன் பயிற்சியைப் பெற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக எமக்கான பயிற்சி…

மேலும் படிக்க