
பல தலைமுறைகள் தாண்டியதோர் நிலைத்திருப்பு, உங்கள் பெயரால் ஓர் மரம்..
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனிமனித வலுவூட்டலினூடாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அவ்வாறே இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக பூமியைக் குளிர்விப்பதற்காக பசுமைப்புரட்சி எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக குறைந்தது 500 மரக்கன்றுகளையாவது நடுதல் அல்லது வழங்குதல் மூலம் இந்த ஆண்டிற்கான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டத்திற்கிணங்க அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் எமது புதிய திட்டமானது அமுல்படுத்தப்பட்டது….