Admin

களவிஜயமும் திட்ட மேற்பார்வையும்

மனித நேய நம்பிக்கை நிதியமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை அவர்களின் பிரதிநிதிகள் வருகைதந்தனர். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி சிரஞ்சீவி அவர்களுடன் அவரது கணவர் திரு.சிரஞ்சீவி வருகைதந்து அனைத்து செயற்பாடுகளையும் நேரடியாக மேற்பார்வை செய்தனர். எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடான கல்விக்கான செயற்பாடுகளாக வந்தாறுமூலை கண்ணகி வித்யாலயத்தில் தரம் 5 மாணவர்களிற்கான செயற்பாடுகள் மற்றும்…

மேலும் படிக்க

நலன்புரி பாலர் பாடசாலையில் வாணி விழா

வாணி விழா என்பது கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியிடம் சிறப்பான கல்வியை வேண்டி கொண்டாடப்படுகின்றது. இந் நிகழ்வு பாலர் பாடசாலைகளிலிருந்து கொண்டாடப்படுவது அவசியமாகும். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வாணி விழா நிகழ்வானது இன்றைய தினம் திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது. இதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து மாதாந்தம் உதவி வழங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் வசிக்கும்…

மேலும் படிக்க

சிறுவர்களே நாளைய தலைவர்கள்

முல்லைதீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களையும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பயிலுனர்களையும் இணைத்து சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. சிறுவர்களே நாளைய தலைவர்கள் எனவே இவ்வாறான ஒன்றுசேர்ந்த நிகழ்வுகளே இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் தற்கால இயந்திரமய வாழ்க்கையில் இறுகிப்போன மனங்களிற்கு ஒரு ஆறுதலாகவும், ஒன்றுசேர்வதன் மூலமாக சமூக சிந்தனைகள் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சந்தோசமாக இன்றைய நாளை…

மேலும் படிக்க

தீபாவளிக்கா? புதுவருடத்திற்கா? கிடைக்கும்…

வருடாந்தம் வரும் பல திருவிழாக்களும், சமய கொண்டாட்டங்களும், விசேட நிகழ்வுகளும் பலருக்கு கொண்டாட்டமாக அமைந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளை திண்டாட்டமாக கடந்துசெல்ல எந்தனிக்கும் பலரும் உள்ளனர். பொருளாதார சூழ்நிலை மற்றும் வருமானமின்மை காரணமாக பல வீடுகளில் இந்த விசேட நிகழ்வுகள் பக்கத்து வீட்டு பட்டாசி சத்தத்துடனும், இருக்கும் உறவுகள் கொடுக்கும் இனிப்புடனும் அமைதியாக முடிந்துவிடுகின்றது. நாமும் வருடாந்தம் எமது அன்னை சாரதா நிலையத்தின் குழந்தைகளுக்கு புத்தாடைகள் எமது நன்கொடை உறவுகள் மூலமாக வழங்கி வைப்பது வழமையான விடயமாகும். இம்முறையும்…

மேலும் படிக்க

சிறுவர் தின நிகழ்வும் பரிசில்கள் வழங்கலும்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வானது வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் இடம்பெற்றது. இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 10 வருடங்களாக எமது செயற்பாடுகளிற்கான உதவி வழங்கிக்கொண்டிருக்கும் திரு.முருகேசு விசாகன் ( கனடா ) அவர்களின் அனுசரணையில் பரிசுப்பொதிகள் இச் சிறுவர்களிற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களால் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. இந் நிகழ்விற்கு…

மேலும் படிக்க

பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசு வழங்கல்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / பலாச்சோலை பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டது, இப்பாடசாலையினை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 5 வருடங்களிற்கு மேலான தொடர்பினூடாக திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் ( கனடா ) குடும்பத்தினர் இதற்கான அனுசரணையினை கடந்த 2 வருடங்களாக வழங்கிவருவதுடன் இப் பரிசுப்பொதிகளையும் இச்சிறார்களிற்கு வழங்கிவைத்தனர். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலை மாணவர்களின் கற்றச் செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பவற்றை கடந்த வருடம் தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு…

மேலும் படிக்க

சிறுவர் தினத்திற்கான பரிசுகள்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் உதவித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையின் சிறுவர்களைப் பார்வையிடல் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு அதற்கான பரிசுப் பொருட்களை வழங்குதல் தொடர்பான நிகழ்வு இன்று நடைபெற்றது. இப்பாடசாலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் விசேட சத்துணவு வழங்கல் போன்ற செயற்பாடுகளிற்கு அமெரிக்காவில இருந்து திரு.நல்லதம்பி குடும்பத்தினர் உதவி வழங்கிக்கொண்டு வருகின்றனர். சிறுவர் தினத்தினை முன்னிட்டு பரிசுப்பொருட்களும் வழங்கி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தொடர்ச்சியான திரு.நல்லதம்பி குடும்பத்தின் உதவி…

மேலும் படிக்க

கல்விக்கான உதவி திட்டத்தில் மேலும் 5 புதிய மாணவர்கள்..

எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாட்டின் முக்கிய செயற்பாடான வறுமை நிலையில் உள்ள கல்வி கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு மாணவர் ஒருவரை பொறுப்பெடுங்கள் என்னும் செயற்பாட்டிற்கு அமைவாக அவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு மாதாந்த உதவித்தொகையினை வழங்கி வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கிவிடாமலிருக்கும் எம்மாலான இந்த செயற்பாட்டிற்கு ஆணிவேராக கிட்டத்தட்ட 70 மாணவர்களை தனது உறவுகள், நண்பர்கள் உதவிமூலம் பெறுப்பெடுத்து கடந்த 5 வருடங்களிற்கு மேலாக எம்முடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் கனடாவில் உள்ள திரு.இ.ஏகாம்பரம்…

மேலும் படிக்க

உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்பு பற்றிய களவிஜயம்

எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக இணைந்து செயற்பாடுகின்ற மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி பங்களிப்பில் எமது கல்விசார் உதவி பணிகளில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்களை இலவசமாக நடாத்தும் திட்டத்தின் 2ம் கட்ட நிகழ்ச்சித் திட்டமானது மட்/ககு / கிரான் மத்திய கல்லூரியில் இவ் வருட மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறை படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த செயற்பாடுகளை கண்காணிப்பு செய்யும் முகமாக பாடசாலைக்கு சென்று பிரதிஅதிபரை சந்தித்து…

மேலும் படிக்க

சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ” சிறுவர்கள் அனைத்தையும் விட பெறுமதியானவர்கள் ” எனும் தலைப்பில் களுவன்கேணி பிரதேசத்தில் உள்ள 3 பாலர் பாடசாலையில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்விற்காக மாணவர்களிற்கான பரிசுப்பொருட்கள் மற்றும் குளிர்பான வசதிகளுக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அதற்கான நிதியினை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவரும்…

மேலும் படிக்க