Admin

பசுமை உலகிற்கு ஓர் அடித்தளம்..

இருபத்தோராம் நூற்றாண்டின் இன்றைய காலப்பகுதியில் புவி வெப்பமாதல் நாம் எதிர்கொள்ளும் பாரியதொரு பிரச்சினையாகும். இது தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும். அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டங்களிலிருந்து சுற்றாடல் முன்னோடிப் படையணி மாணவர்களை ஜனாதிபதி விருதிற்கு பரிந்துரைக்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மாணவர்களும் இணைக்கப்பட்டு சுற்றாடல் மேம்பாட்டு முன்னோடி குழு உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது திட்டமுகாமையாளர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், இரு…

மேலும் படிக்க

சுயதொழிலுக்கு ஓர் களம் ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில்எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட தையல் சுயதொழில் முயற்சியாளரான திருமதி.யோகநாயகி அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாட்டிற்காக நிதி அனுசரணை வழங்கிய எமது அறக்கட்டளை உறவான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு.மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த…

மேலும் படிக்க

மலையகம் நோக்கிய பயணம்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கிய வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் பயிற்சி முறைமையினை ஒரு நாள் பயிற்சி பட்டறை மற்றும் 3 மாத பயிற்சி என எதிர்கால சந்ததியினை வலுப்படுத்தும் ஒரு போராட்டமாக வடகிழக்கு மற்றும் மலையகம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மலையக பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக பது/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ்…

மேலும் படிக்க

மாணவர் ஒருவரைப் பொறுப்பெடுங்கள்!

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது “மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்களை அவர்களின் பாடசாலைகளினூடாகத் தெரிவுசெய்து புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மாதாந்தம் அவர்களின் கல்விக்கான ஊக்குவிப்புத்தொகை ஒன்றை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்விக்கான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கனடாவில் வசிக்கும் எமது நீண்டகால நன்கொடையாளராகிய திரு.இ.ஏகாம்பரம் ஐயா அவர்களின் உதவியுடன் 2020 இல் ஐந்து பேர் கொண்ட சிறிய மாணவர்…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்காக நாம்

நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப சிறந்த தலைவர்களை உருவாக்குதல் எனும் அடிப்படையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர் கட்டங்களாக மாதாந்தம் இருமுறை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கான இரண்டாவது செயலமர்வானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்களின் ஆற்றுகையின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உட்பட எமது சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள முறையில் முரண்பாடுகள் எனும் கருப்பொருளில்…

மேலும் படிக்க

அவளின் சுமைகளில் ….

வாழ்வாதாரத்திற்கென சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குவதோடு நின்றுவிடாமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பிரதேசங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதன் மூலமும் அவர்களைப் பொருளாதார ரீதியிலும் மேம்படுத்த முடியும். அந்த வகையில் எமது பொருளாதார அபிவிருத்தி திட்டத்தினூடாக ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோவில்குளம் கிராமத்தில் வாழும் குடும்பத் தலைவிகள், பெண்கள் ஆகியோருக்கான தொடர் நிகழ்வுகள் நடைபெற்று…

மேலும் படிக்க

ஆற்றுப்படுத்துகை !ஓர் உளவியல் உந்துகோல்….

இன்றைய காலகட்டத்தின் இளம் சமுதாயத்தினருக்கு கல்வியைக் காட்டிலும் உளவியல் ஆரோக்கியம் மிகவும் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது. அதற்கிணங்க மாணவர்களிடையே கற்றல் செயற்பாடுகள் மாத்திரமல்லாது வாழ்க்கைத் திறன் மற்றும் விழுமியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியினரின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கு ஆற்றுப்படுத்துகைக்கான வழிகாட்டல் காட்சிப்படுத்தல் பதாதை வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளூடாக மாணவர்களுக்கான வழிகாட்டலை…

மேலும் படிக்க

பசுமை உலகிற்கு வித்திடுவோம்..

இன்றைய காலகட்டத்தில் சூழல் மாசடைதல், புவி வெப்பமாதல் போன்ற விளைவுகளால் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும். அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்திற்கான கலந்துரையாடல் மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், சூழல் பாதுகாப்புக் கழக பொறுப்பாசிரியர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட 25 சூழல் பாதுகாப்பு குழு…

மேலும் படிக்க

ஆலங்குளம் கிராமத்தின் பாடசாலைக்கான களதரிசனம்

பாடசாலையால் எமது அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக 53.7 Km தூரம் பயணம்செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலே எல்லை கிராமமாக காணப்படும் ஆலங்குளம் அ.த.க பாடசாலைக்கு சென்று எமது குழுவால் மேற்கொள்ளப்பட்ட களத்தரிசனத்தில் இந்த கிராமத்தில் 320 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அரச உத்தியோகமோ, தனியார் துறையிலோ தொழில் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை. காரணம் தரம் 9 வரையும் கல்விகற்கும் வசதியுடனான பாடசாலையே உள்ளது. சுற்றிவர இருக்கும் 2 கிராமங்களிலும் பாடசாலை இல்லாததால் அந்த கிராமங்களிற்கும் பொதுவான…

மேலும் படிக்க

கரம் கொடுப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் Calculator ஒன்றும் எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க