மாதிரி பாலர் பாடசாலையில் அறக்கட்டளை உறவினரின் பிறந்த தினம்
சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்றது. அந்தவகையில் எமது அறக்கட்டளை உறவான அமெரிக்காவில் வசிக்கும் திரு.திருமதி.தர்மிகா ராஜ் அவர்களின் மகளாகிய செல்வி.அனிக்கா ராஜ் அவர்களின் 5 வது பிறந்த தினம் திருநீற்றுக்கேணி/நலன்புரி பாலர் பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதோடு பிறந்த தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை வளாகத்தினுள் அறக்கட்டளையினரால் மரநடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து…