vcot

காரைதீவிலும் கணினி கற்கை கூடம் ஆரம்பம் …

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக நாம் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி சமுதாயக் கல்லூரிகளை நாம் உருவாக்கி வருகின்றோம். அதனடிப்படையில் இவ்வாறான பிரதேசங்களில் கணினி கூடங்களை மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்படுத்தி வருகின்றது. அதன் பிரகாரம் முல்லைதீவு…

மேலும் படிக்க
certificate ceremony

நாளைய வெற்றிக்கான அடித்தளமாய் இன்றைய சிறு மேடை…

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்காகவும் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினைத் தவறவிட்டவர்களுக்காகவும் விசேடமான பயிற்சிகளாக வாழ்வியலும் வழிகாட்டலும், அடிப்படைக் கணினி மற்றும் அலுவலக முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளை உருவாக்கி காலத்தின் தேவைக்கேற்ற வகையில் அதனை பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின், புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உள்ளடங்கலாக Office management & IT மற்றும் CCTV Installation & PABX Technician பயிற்சி நெறிகளைப்…

மேலும் படிக்க

Community Development in Mavilangathurai

மாவிலங்கத்துறையில் கல்வி மற்றும் மாணவர்களை மேம்படுத்துவதில் கூட்டிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளல்.
Celebrating excellence and fostering community development in Mavilangathurai with collaborative efforts in education and Student empowerment.

மேலும் படிக்க

விவேகானந்த கலாச்சார நிலைய பணிப்பாளரின் வருகை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர் யுவதிகளின் வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து எமது கல்லூரியின் பயிற்சிநெறிகள் மற்றும் எமது செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் பயிற்சிகள் பற்றிய விளக்கங்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டது. இவ்வாறான திறன்…

மேலும் படிக்க

ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை

எமது மனிதநேய சமுதாய கல்லூரிக்கு கரடியனாறு மகா வித்தியாலயத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் எமது திட்ட முகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன் மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த…

மேலும் படிக்க

சமவாய்ப்புடனான கல்விக்கும், திறனுக்கும் சமுதாய கல்லூரி

மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கோயில்குளம், மாவிலங்கன்துறை, போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையோர் என அனைவரினையும் கருத்தில் கொண்டு இவர்களிற்கான விசேட பயிற்சிகளை வழங்கும் புகலிடம் சமுதாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அமெரிக்க நாட்டு பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் புகலிடம் சமுதாய…

மேலும் படிக்க

இளைஞர்கள் மாற்றத்தை நோக்கிய சமுதாயக் கல்லூரிகள்…

பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் காணப்படும் இளைஞர் யுவதிகளை முன்னேற்றும் ஒரு செயற்பாடாக இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்ய முடியாத, பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்டு தமது எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கிய இளைஞர், யுவதிகளை அடிப்படையாக கொண்டு மாற்றுக்கல்வி முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் என்ற விதத்தில் தொழில்ப்பயிற்சிகளை வழங்கும் சமுதாயக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இந்த மனிதநேய சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிகஸ்ட பிரதேசமாகவும்,…

மேலும் படிக்க

முழுவதுமாகத் தீர்க்க முடியாதெனினும்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகக் காணப்படும் ஆலங்குளம் கிராமம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட சிரமத்தை எதிர்நோக்கும் அதிகஷ்டப் பிரதேசமாகும். இக்கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியதொரு பிரச்சினையாகும். அந்தவகையில், ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் முதன் முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்தவிருக்கும் அதேவேளை அந்நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் போத்தலை பரிசாகக் கொடுப்பதற்காக எமது அறக்கட்டளையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வேண்டுகோளுக்கிணங்க எமது அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பப்பிரிவு…

மேலும் படிக்க

விவேகானந்த பூங்கா திறப்பு விழா

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன ; நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு, திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்காவின் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத்…

மேலும் படிக்க

வலுவூட்டலுக்கான ஒரு அடித்தளம் ..

எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன் றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த செல்வன். சுசித்திரன் சுகிர்தன் மற்றும் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.தினேஸ்குமார் லிதேஸ் ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர். விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின்…

மேலும் படிக்க