அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு…