விவேகானந்த குடும்பத்தினரின் இன, மத பேதம் கடந்த பொங்கல் கொண்டாட்டம்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்துண்டு நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த குடும்பத்தினரால் இன, மத, பேதங்களின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் உழவர் திருநாள் இன்றைய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும்…

மேலும் படிக்க

சாரதா நிலைய மாணவிகளின் தைத்திருநாள் கொண்டாட்டம்..

உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்துழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் தினமாகும். இந்நாள் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் வெகு விமரிசையாக பொங்கல் விழா அனுஷ்டிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும், சாரதா நிலைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இம்மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை சிறப்பானதாகும். இதற்கான அனுசரணையை…

மேலும் படிக்க