அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை களங்கள் தோறும் நாம் நடாத்தி வருகின்றோம். அந்தவகையில்பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான கணினி விழிப்புணர்வு செயற்பாடுகளும் வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமப் பிரதேசத்தில் தொடர்கட்டங்களாக நடாத்தப்பட்டு வந்த கணினி பயிற்சி வகுப்பின் இறுதிநாள் நிகழ்வு மாவிலங்கத்துறையில் இடம்பெற்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர், மாவிலங்கத்துறை கிராம சேவை உத்தியோகத்தர், ஆலய…