மழைத்துளியாய் நாம்..
உலர் விதையின் மீது படும் சிறு மழைத்துளி கூட பெரு மரத்தைத் தோற்றுவிக்க வல்லது. அவ்வாறே வழி தவறும் சமுதாயத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் வழிகாட்டியாய் நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான வலுவூட்டல் எமது சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது. அதற்கிணங்க, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகிய மற்றும் இலட்சியத்தை அடையாளம் காண முடியாத பின்தங்கிய கிராமப் பிரதேச இளைஞர் யுவதிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலாக மாதந்தோறும் களங்களமைக்கும் செயற்பாட்டினை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதனடிப்படையில் ஆனி மாதத்திற்கான நிகழ்வு சேவா நிர்ணய ஏற்பாட்டில்…