நாளைய தலைவர்களின் தேவை ? அடிப்படை ஆங்கிலம் !
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர்களை வலுவூட்டும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கடந்த வருடம் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த வருடம் வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கிணங்க அதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. வித்யாலய அதிபர், மாணவர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர்…