
இல்லத்தினருடன் இறை தூதனின் பிறந்த நாள் கொண்டாட்டம்
உலக மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வண்ணம் இயேசு கிறிஸ்து பிறந்த நாளினை தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடி வருகின்றோம். கிறிஸ்துமஸ் பண்டிகையானது உலகெங்கிலுமுள்ள சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் பரிசுகள் பரிமாற்றப்பட்டு உல்லாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது ஜீவானந்தா மகளிர் இல்லத்தினருடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களுக்கான இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள்…