நாளைய சிந்தனையாளர்களுக்குஇன்று ஓர் களம்

சிறு வயது முதல் ஒரு மனிதனிடத்தில் விதைக்கப்படும் உயரிய சிந்தனையே நாளைய நாட்டின் சிறந்த பிரஜைகளை உருவாக்க வல்லது. அதனடிப்படையில் மாணவர்களை இன்றே நேரிய சிந்தனையாளர்களாகக் கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 ஐச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத்திறன் பயிற்சி பெற்ற சேவையாளர்களால் நடாத்தப்பட்டது. நேர்மறை எண்ணங்கள் நமது வாழ்வில் எவ்வாறு தாக்கம்…

மேலும் படிக்க

மாதம் ஒரு களம்…

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கான வாழ்வியல் திறன்களையும் வழங்கும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்திற்குச் சென்று அங்கு குழு மேம்பாடு எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சி நடாத்தப்பட்டது. இவ்வாறான குழு மேம்பாடு செயற்பாடுகளை மேற்கொண்டு இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல்களுக்கு எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும். இச் செயற்பாட்டிற்காக…

மேலும் படிக்க

சிட்டுப் பூச்சிகளான சிறுவர்களை நாம் மகிழ்விப்போம்

உலகின் மாற்றங்களோ உளவியல் தாக்கங்களோ எதுவுமே தெரியாமல் இன்பமாய் வாழ வேண்டும் என சிறுவர்களிற்காகவே ஒரு சர்வதேச தினம் ஒக்டோபர் 1. உலக சிறுவர்கள் தினத்தில் அவர்களை நாமும் மகிழ்விப்போம். பல்வேறு கஸ்டமான குடும்ப சூழ்நிலைகளில் இருந்து பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறுவர்களிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எம் அறக்கட்டளை உறவுகள் 5 பாடசாலைகளை பொறுப்பெடுத்து நாம் நடாத்த உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த வயதில் அவர்கள் மனதில் உள்ள அந்த மகிழ்வு தான் எதிர்காலத்தில் அவர்களின் மனநிலையும் நடத்தையும் ஆகவே…

மேலும் படிக்க

மாற்றம் கிராமத்தில் இருந்து…

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க”கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் அடிப்படைத் தேவையாக உள்ள கல்வி, கலாச்சார, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது…

மேலும் படிக்க

அமைப்புகள் பலவாறாயினும் நோக்கம் ஒன்றே !

அமைப்புகள் பலவாறு இருப்பினும் தனிமனித வலுவூட்டலினூடான சமூக மாற்றமே எமது நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்குமான காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர்.திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு இக்காலப்பகுதியில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எமது எதிர்காலத்…

மேலும் படிக்க

அனைவர்க்கும் புத்தாடை !

இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது. அதன் பிரகாரம் தமிழர் தம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மருத்துநீர் வைத்து புத்தாடை அணிந்து ஆலயம் சென்று பெரியவர்களிடம் கைவிசேடம் பெறுவது மரபாகும். அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது மாணவர்களுக்கான புத்தாடைகளை சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் வழங்கிவருகின்றது. அவ்வாறே பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டிற்காக மட்டக்களப்பு, மற்றும் முல்லைத்தீவில் அமைந்துள்ள சிறுமிகள் பராமரிப்பு…

மேலும் படிக்க