ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை

எமது மனிதநேய சமுதாய கல்லூரிக்கு கரடியனாறு மகா வித்தியாலயத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் எமது திட்ட முகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன் மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த…

மேலும் படிக்க

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்துரையாடல்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத்தொகை ஒன்றினை மாதாந்தம் வழங்கி வருகின்றது. அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலில் ஒரு புதிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 7 மாணவர்களுடனான கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இத்திட்டம் தொடர்பான பூரண விளக்கங்களும் வழங்கப்பட்டு…

மேலும் படிக்க

பாடசாலை ஒன்றுக்கான Printer.

மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மாணவர்களையும் தாண்டி பாடசாலைகளில் இருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியினரின் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கான Printer வழங்கப்பட்டது. எமது திட்டமுகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த…

மேலும் படிக்க

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மேலதிக வலுவூட்டல்

மனித நேய நம்பிக்கை நிதியமானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மாணவர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் ஒரு புதிய அத்தியாயமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் வண்ணம் எமக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களைத் தெரிவு செய்யும் வகையில் மாணவர்களது வீடுகளுக்கான கள விஜயமானது நடைபெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்பாட்டிற்காக…

மேலும் படிக்க

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நடைமுறைப்படுத்தலூடாகப் பாடசாலைகளின் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளை வருடாந்தம் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கல்லூரிகளை மையப்படுத்தியதாக களுதாவளை, பட்டிருப்பு, பழுகாமம், மண்டூர், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் 1060 மாணவர்களுக்கான ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் தொழிநுட்பவியல் பாடங்களுக்கான கருத்தரங்குகள் செவ்வனே நடைபெற்றது. இவ்வாறான கருத்தரங்குகள்…

மேலும் படிக்க

சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தாடைகள்

எமது திட்டங்களினுடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் இல்லங்களில் வாழும் மாணவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடினோம். அந்த வகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது சாரதா நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கான புத்தாடைகள் வழங்கப்பட்டு தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இச் செயற்பாட்டை நாம் முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருந்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நன்கொடை வழங்கியஎமது அறக்கட்டளை உறவுகளின் விபரம் வருமாறு = எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு,…

மேலும் படிக்க

அவர்கள் கிராமத்தை அவர்களே அபிவிருத்தி செய்ய

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் மாவிலங்ககத்துறையில் கிராம அபிவிருத்திப் படையணியை உருவாக்குவதற்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை மாவிலங்கத்துறை கிராம சேவகர் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சிப் பட்டறையில் பற்றிமாபுரம், மண்முனை மற்றும் மாவிலங்கத்துறையேன மூன்று கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு தங்கள் கிராமங்களில் உள்ள பின்னடைவுகள் மற்றும் நடைமுறை பிரச்சினைகள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. தனிமனித இலக்கு மற்றும் கிராமத்தின் இலக்கு பற்றியும் ஆராயப்பட்டதோடு சிறு செயற்பாடுகள் மூலமும் தெளிவூட்டப்பட்டது….

மேலும் படிக்க

பாலர் பாடசாலையினருக்கான சீருடைகள்

எமது சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினுள் அடங்கும் 5 பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 125 சிறுவர்களுக்கான சீருடைகள் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் வழங்கிவைக்கப்பட்டது. எமது பாலர் பாடசாலைகளும் இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய எமது அறக்கட்டளை உறவுகளும் வருமாறு = இச்செயற்பாட்டிற்காக அனுசரணை வழங்கிய எமது உறவுகளுக்கும் இச் செயற்பாட்டின் மேலதிகமான பங்களிப்பை எமது அறக்கட்டளையினூடாக வழங்கிய திரு.வலன் சிவராஜா மற்றும்…

மேலும் படிக்க

தீபாவளி திருநாளை முன்னிட்டு

இருள் அகல ஒளியேற்றி இறைவனை நாடும் தீபத்திருநாளை முன்னிட்டு வருடாந்தம் எம்முடன் இணைந்து பயணிக்கும் இல்லங்களில் வாழும் சிறுவர்களுக்கான ஆடைகளை எமது புலம்பெயர்ந்த உறவுகளின் அனுசரணையுடன் நாம் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் மயிலம்பாவளி வாழும் கலை ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கான ஆடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட சேவையாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருந்து எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நன்கொடை வழங்கிய அனைத்து நன்கொடை உள்ளங்களுக்கும் எமது அறக்கட்டளை சார்பாக…

மேலும் படிக்க

சமவாய்ப்புடனான கல்விக்கும், திறனுக்கும் சமுதாய கல்லூரி

மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கோயில்குளம், மாவிலங்கன்துறை, போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையோர் என அனைவரினையும் கருத்தில் கொண்டு இவர்களிற்கான விசேட பயிற்சிகளை வழங்கும் புகலிடம் சமுதாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அமெரிக்க நாட்டு பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் புகலிடம் சமுதாய…

மேலும் படிக்க