வித்தகராம் விவேகானந்தரின் நெறி நின்று..
ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காகவும் தமது ஆணித்தரமான வார்த்தைகள் மூலம், உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வை விழிப்புறச் செய்து எமது சமூகத்தில் ஆன்மீக ஞான ஒளி புகட்டி, மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தி, இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜனன தினமானது எமது விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியில் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும்…