சமவாய்ப்புடனான கல்விக்கும், திறனுக்கும் சமுதாய கல்லூரி

மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கோயில்குளம், மாவிலங்கன்துறை, போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையோர் என அனைவரினையும் கருத்தில் கொண்டு இவர்களிற்கான விசேட பயிற்சிகளை வழங்கும் புகலிடம் சமுதாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அமெரிக்க நாட்டு பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் புகலிடம் சமுதாய…

மேலும் படிக்க

இளைஞர்கள் மாற்றத்தை நோக்கிய சமுதாயக் கல்லூரிகள்…

பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் காணப்படும் இளைஞர் யுவதிகளை முன்னேற்றும் ஒரு செயற்பாடாக இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்ய முடியாத, பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்டு தமது எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கிய இளைஞர், யுவதிகளை அடிப்படையாக கொண்டு மாற்றுக்கல்வி முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் என்ற விதத்தில் தொழில்ப்பயிற்சிகளை வழங்கும் சமுதாயக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இந்த மனிதநேய சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிகஸ்ட பிரதேசமாகவும்,…

மேலும் படிக்க

சாதனைகளுக்கு உணர்வுகளே பாரிய தடை.

திறமைகளும் ஆற்றல்களும் இருந்தாலும் கூட வெளிக்கொணர்வதற்கான தைரியம் இன்மையே இன்றைய கால மாணவ சமுதாயத்தினரின் பாரிய சவாலாக அமைகின்றது. ஆதலால், சிறுவயது முதல் இளம் தலைமுறையினருக்கு வாழ்வியலை எடுத்துரைப்பதன் மூலம் எண்ணற்ற சாதனைகளுக்கு இயல்பானவர்களாக அவர்களை மாற்ற முடியும். அந்தவகையில், பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் பயிலும் மாணவிகளுக்கான ஒருநாள் வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைதிறன் பயிற்சி பெற்ற சேவையாளர் குழுவினரால் நடாத்தப்பட்டது. தரம் 9 மற்றும் தரம் 10 ஐச் சேர்ந்த…

மேலும் படிக்க

இல்லங்களில் வாழும் சிறுமிகளின் உள்ளங்களிலும் ஒளியேற்ற

பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் மரபிற்கு ஏற்ப தமிழர் வழி வந்த பண்டிகையாம் தீபாவளிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறே அதிகாலையில் நீராடி புத்தாடை அணிந்து இல்லங்களில் விளக்கேற்றி ஒளி பெருக்கி தீபத்திருநாளை கொண்டாடுவது எமது வழக்கம். அந்த வகையில், அனைவர்க்கும் புத்தாடை எனும் கருப்பொருளில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், ஜீவானந்தா மகளிர் இல்லம், வாழும் கலை நம்பிக்கை நிதியம் ஆகிய எமது திட்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு தலா 5000 LKR வீதம்…

மேலும் படிக்க

நாளைய சிந்தனையாளர்களுக்குஇன்று ஓர் களம்

சிறு வயது முதல் ஒரு மனிதனிடத்தில் விதைக்கப்படும் உயரிய சிந்தனையே நாளைய நாட்டின் சிறந்த பிரஜைகளை உருவாக்க வல்லது. அதனடிப்படையில் மாணவர்களை இன்றே நேரிய சிந்தனையாளர்களாகக் கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 ஐச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத்திறன் பயிற்சி பெற்ற சேவையாளர்களால் நடாத்தப்பட்டது. நேர்மறை எண்ணங்கள் நமது வாழ்வில் எவ்வாறு தாக்கம்…

மேலும் படிக்க

மாதம் ஒரு களம்…

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கான வாழ்வியல் திறன்களையும் வழங்கும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்திற்குச் சென்று அங்கு குழு மேம்பாடு எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சி நடாத்தப்பட்டது. இவ்வாறான குழு மேம்பாடு செயற்பாடுகளை மேற்கொண்டு இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல்களுக்கு எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும். இச் செயற்பாட்டிற்காக…

மேலும் படிக்க

எழுத்துக்கள் தாண்டிய சாதனைகளுக்கு

முறையான கல்வி என்பது நூலறிவு மாத்திரமின்றி விளையாட்டுக்கள் வெளிக்கள செயற்பாடுகள் என பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது. அந்த வகையில், மாணவர்களின் கல்வியைத் தாண்டி அவர்களின் தேவைப்பாடுகளையும் கருத்திற்கொள்வது எமது கடமையாகும். அதன் பிரகாரம், தேசிய ரீதியாக பல்கலைக்கழகங்களிடையே நடைபெறும் வலைப்பந்து போட்டியில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான சீருடைகளுக்கான கோரிக்கைக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது கிழக்கு பல்கலைகக்கழக வலைப்பந்தாட்க் குழு மாணவர்களுக்கான சீருடைகள் எமது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையிலே எமது கோரிக்கையினை…

மேலும் படிக்க

விதை

United board of Christian Higher Education in Asia இன் ஒருங்கிணைப்பினூடாக இந்திய சமுதாய கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தினால் (ICRDCE) மட்டக்களப்பிலிருந்து 3 தொழிற்பயிற்சி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமுதாய கல்லூரி முறைமை மற்றும் வாழ்வியல் பயிற்றுவிக்கும் 2 வாரகால TOT பயிற்சி பட்டறைக்கு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் இந்தியா சென்று வாழ்க்கைத் திறன் பயிற்சியைப் பெற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக எமக்கான பயிற்சி…

மேலும் படிக்க

சிட்டுப் பூச்சிகளான சிறுவர்களை நாம் மகிழ்விப்போம்

உலகின் மாற்றங்களோ உளவியல் தாக்கங்களோ எதுவுமே தெரியாமல் இன்பமாய் வாழ வேண்டும் என சிறுவர்களிற்காகவே ஒரு சர்வதேச தினம் ஒக்டோபர் 1. உலக சிறுவர்கள் தினத்தில் அவர்களை நாமும் மகிழ்விப்போம். பல்வேறு கஸ்டமான குடும்ப சூழ்நிலைகளில் இருந்து பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறுவர்களிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எம் அறக்கட்டளை உறவுகள் 5 பாடசாலைகளை பொறுப்பெடுத்து நாம் நடாத்த உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த வயதில் அவர்கள் மனதில் உள்ள அந்த மகிழ்வு தான் எதிர்காலத்தில் அவர்களின் மனநிலையும் நடத்தையும் ஆகவே…

மேலும் படிக்க

தடைகள் களைவோம்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்டு எம்மால் பொறுப்பெடுக்கப்பட்ட, உயர்தரம் பயிலும் 4 மாணவர்களின் கோரிக்கைக்கமைவாக அவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் கள சேவையாளர்களால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது இவ்வாறான செயற்பாடுகளுக்காக அனுசரணையை வழங்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர்…

மேலும் படிக்க