வலுவூட்டலுக்கான ஒரு அடித்தளம் ..

எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன் றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த செல்வன். சுசித்திரன் சுகிர்தன் மற்றும் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.தினேஸ்குமார் லிதேஸ் ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர். விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின்…

மேலும் படிக்க

இரக்கப்படுவதை விட அவர்களை சிறக்கப் பண்ணுவோம்.

ஆரையம்பதியில் உடல், உள நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள், மாணவர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த புகலிடம் நிலையத்தின் செயற்பாட்டிற்கு நிதியுதவி இல்லாமல் போனதையிட்டு எமது அறக்கட்டளையினை அவர்கள் நாடியபோது. அங்கு வரும் இறைவனின் குழந்தைகளான அவர்களிற்கு சத்துணவு பொதிகளை வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன்வந்தன. அதன் அடிப்படையில் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் நண்பர்கள், உறவுகள் இவர்களிற்கான கணினி பயிற்சி மற்றும் ஏனைய போக்குவரத்து செலவுகளுக்கான நன்கொடையினை கடந்த வருடம் வழங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து இவ்வருடம்…

மேலும் படிக்க

ஸ்தாபகரின் சேவையாளர்களுடனான கலந்துரையாடல்

ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் விவேகனந்த தொழில் நுட்பவியல் கல்லூரி விஜயத்தினைத் தொடர்ந்து விவேகானந்த குடும்பத்தினருடான சந்திப்பினை மேற்க்கொண்டிருந்தார். இக் கலந்துரையாடலானது அமிர்தா நிறுவனத்தில் இடம்பெற்றது. இதன்போது சேவையளர்களின் அறிமுகமும் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலானது நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையின் கீழ் நிதிப் பணிப்பாளர் திரு.எஸ்.புருசோத்மன், மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள், ஏனைய சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். முதலாவதாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மூன்று நிலையங்களினதும் தொழில்பயிற்சி செயற்பாடுகள் பற்றிய விளக்கமானது திரு.த.சந்திரசேகரம் அவர்களின் வழிநடத்தலின்…

மேலும் படிக்க

கல்லூரி ஸ்தாபகரின் இலங்கை விஜயம்

முப்பது ஆண்டுகளாக மகத்தான சேவையை வழங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பு , கடந்த 12 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை வலுவூட்டியதன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த பூங்கா ஆகியவற்றின் ஸ்தாபகராகிய திரு.கந்தப்பன் சற்குணேஸ்வரன் அவர்கள் இலங்கைக்கான தமது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். அந்தவகையில் இங்கு நடைபெற்ற செயற்பாடுகளைப் பார்வையிடும் வண்ணம் விவேகானந்த பூங்காவினைப் பார்வையிட்டதோடு மட்டுமன்றி விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரிக்கான வருகையை அடுத்து சுவாமி…

மேலும் படிக்க

கள செயற்பாடுகளின் அடுத்த கட்ட நகர்வு..

அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை களங்கள் தோறும் நாம் நடாத்தி வருகின்றோம். அந்தவகையில்பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான கணினி விழிப்புணர்வு செயற்பாடுகளும் வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமப் பிரதேசத்தில் தொடர்கட்டங்களாக நடாத்தப்பட்டு வந்த கணினி பயிற்சி வகுப்பின் இறுதிநாள் நிகழ்வு மாவிலங்கத்துறையில் இடம்பெற்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர், மாவிலங்கத்துறை கிராம சேவை உத்தியோகத்தர், ஆலய…

மேலும் படிக்க

ஆசிரியர்களுக்கானதோர் மேடை..

சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர் பராமரிப்புத் திட்டத்தினூடாக புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான போசாக்கான உணவு மாணவர்களுக்கான சீருடை, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், எமது பாலர் பாடசாலை ஆசிரியர்களை தொழில் ரீதியாக மாத்திரமின்றி தனிமனிதனாகவும் வலுவூட்டும் வகையில் மற்றும் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களில் மறைமுகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணிணி மற்றும் ஆங்கிலப் பயிற்சி…

மேலும் படிக்க

மாற்றம் எம்மிடமிருந்தே.. !

பின்தங்கிய கிராமப்புறங்களில் காணப்படும் பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவு மாத்திரமே காணப்படுகின்றது. இதனால் வெளிப்பாடசாலைகளுக்குச் சென்று கற்பதற்கான வசதிகளும் இல்லாத நிலையில் பல மாணவர்கள் அந்த பாடசாலையில் கலைப்பிரிவினையே தேர்ந்தெடுக்கின்ற போதிலும் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது இலகுவான பாடங்களான மொழிப்பாடம். அழகியற்பாடம். சமய நாகரீக பாடங்களையே அனேகமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கமைவாக மட்/பட்/காக்காச்சிவட்டை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களின் கிதுசனா சுவாசவேர்கள் என்ற அமைப்பினால் அந்த கிராமப்பகுதியில் உயர்தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களிற்கான…

மேலும் படிக்க

பசுமை உலகிற்கு ஓர் அடித்தளம்..

இருபத்தோராம் நூற்றாண்டின் இன்றைய காலப்பகுதியில் புவி வெப்பமாதல் நாம் எதிர்கொள்ளும் பாரியதொரு பிரச்சினையாகும். இது தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும். அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டங்களிலிருந்து சுற்றாடல் முன்னோடிப் படையணி மாணவர்களை ஜனாதிபதி விருதிற்கு பரிந்துரைக்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மாணவர்களும் இணைக்கப்பட்டு சுற்றாடல் மேம்பாட்டு முன்னோடி குழு உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது திட்டமுகாமையாளர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், இரு…

மேலும் படிக்க

சுயதொழிலுக்கு ஓர் களம் ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில்எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட தையல் சுயதொழில் முயற்சியாளரான திருமதி.யோகநாயகி அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாட்டிற்காக நிதி அனுசரணை வழங்கிய எமது அறக்கட்டளை உறவான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு.மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த…

மேலும் படிக்க

மலையகம் நோக்கிய பயணம்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கிய வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் பயிற்சி முறைமையினை ஒரு நாள் பயிற்சி பட்டறை மற்றும் 3 மாத பயிற்சி என எதிர்கால சந்ததியினை வலுப்படுத்தும் ஒரு போராட்டமாக வடகிழக்கு மற்றும் மலையகம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மலையக பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக பது/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ்…

மேலும் படிக்க