அறநெறி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் !

தற்போதைய மாணவர் சமுதாயத்திற்கு பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது ஒழுக்கம் மற்றும் விழுமியப் பண்புகளையும் போதிப்பதன் மூலம் முறையான பிரஜைகளை உருவாக்க முடியும். அதன் பிரகாரம் அறநெறிப் பாடசாலைகள் அவ்வாறான ஒழுக்க விழுமியப் பண்புகளைப் போதித்து வருகின்றன. அதற்கிணங்க அப்பாடசாலைகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள அறநெறி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்பாடானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 80…

மேலும் படிக்க

களம் அமைப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையை வழங்கும் வண்ணம் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில் எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளரான திருமதி.தங்கமலர் கணேசராஜா அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாடானது வாழ்வாதார ஊக்குவிப்பாக மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்குமான கல்வி…

மேலும் படிக்க

அமைப்புகள் பலவாறாயினும் நோக்கம் ஒன்றே !

அமைப்புகள் பலவாறு இருப்பினும் தனிமனித வலுவூட்டலினூடான சமூக மாற்றமே எமது நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்குமான காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர்.திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு இக்காலப்பகுதியில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எமது எதிர்காலத்…

மேலும் படிக்க

பெற்றோருடனான கலந்துரையாடல்

மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் நடைபெறுகின்ற Office management & IT மாணவர்களுக்கான பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் இப் பயிற்சியின் நிதி வழங்குனர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டதோடு க.பொ.த உயர்தரத்தின் பின்னர் தமது வாழ்க்கையினை திட்டமிட்டு ஒரு சிறந்த எதிர்காலத்தினை…

மேலும் படிக்க

கல்வி மற்றும் திறன் விருதிக்காக

எமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன் எமது அறக்கட்டளை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் 2 நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது. மாணவர்களின் வலுவூட்டலுக்காக அன்னை ஶ்ரீ சாரதா நிலையமும், இளைஞர்களின் வலுவூட்டலுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் செயற்படுகின்றது. அவற்றின் காலாண்டு செயற்பாடுகளை கண்காணிக்கவும், அவற்றினை மேம்படுத்தவும் எமது சமூகப்பணியாளர்களினால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. அன்னை சாரதா நிலையத்தில் தரம் 8 இல் இருந்து தரம் 13 வரை 60 மாணவிகள் உள்ளனர். அவர்களில் தற்போது 10 பேர் க.பொ.த சாதாரண…

மேலும் படிக்க

களத்தில் நாம் செயற்றிட்டம் 2024..

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்கு தொழில்நுட்பக்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் பாடத்தேர்வுகளுக்கும் எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும். அதற்கிணங்க உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி…

மேலும் படிக்க

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு…

மேலும் படிக்க

விழுதுகளில் ஒரு நினைவாக ..

ஆலம் விதையென வேரூன்றி இன்று ஆயிரம் விழுதுகளைத் தன்னகத்தே கொண்ட விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை செவ்வனே கடக்கின்றது. அதேவேளை விழுதுகளில் ஒரு நினைவாக எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன்றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக பாடசாலை மற்றும் மேலதிக கல்விசார் நடவடிக்கைகளிற்கு அதிக தூரம் செல்லவேண்டியுள்ள வறுமை நிலையில் உள்ள மாணவர்களிற்கு அவர்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு துவிச்சரக்கர வண்டிகள் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளும் முகமாக முதற்கட்டமாக மாணவி…

மேலும் படிக்க

விழுதுகள் !

” நீ செய்த தவறுகளை வாழ்த்து; அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டுகின்றது.” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க வலிகளும் ஆயிரம் தடைகளும் கடந்து அனுபவங்கள் மூலம் பாடங்கள் பலகற்று, படிப்படியாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது 2019.04.17 ஆம் திகதி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை இனிதே கடக்கின்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது திட்ட முகாமையாளர் திரு.சு.ராஜு கபீரியல் அவர்களின்…

மேலும் படிக்க

கிராமங்களை நோக்கிய பயணங்கள்…

பாடசாலைக் கல்வியின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் பின்தங்கிய கிராமங்களில் தேக்கமடையும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தூரநோக்குடன் அவர்களின் வாழ்க்கையினை திட்டமிடவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படும் சில குறிப்பிட்ட திறன்களை அடையாளப்படுத்தி அவற்றினை நிபர்த்தி செய்திடும் ஒரு செயற்பாடாகும். AU Lanka & Child Fund நிதி அனுசரணையில் எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையும் இணைந்து வவுணதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம…

மேலும் படிக்க