ஜீவானந்தா.. பெண்களுக்காய் ஓர் இல்லம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஆறு திட்டங்களினூடாகப் பல்வேறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத்திட்டம் மற்றும் விசேட தேவையுடையோர்க்கான திட்டங்களின் மூலம் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமதுbபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 10 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு எமது மாணவர்களைப்…

மேலும் படிக்க

ஆயுதம் கல்வியே !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியில் எம்மாலான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளையினூடாக அடையாளம் காணப்பட்ட 2 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் எமது திட்ட முகாமையாளரின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பானதாகும். வறுமையிற் கல்வியே உயர்த்திடும் ஏணியாகும். அதற்கிணங்க தாங்கள் எம்முடன் இணைந்து வழங்கும்…

மேலும் படிக்க

சக்தி பாலர் பாடசாலையினரின் தைப்பொங்கல் விழா

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் வந்தாறுமூலை/ சக்தி பாலர் பாடசாலையில் தைத்திருநாள் கொண்டாட்டமானது வெகு விமரிசையாக இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். சக்தி பாலர் பாடசாலைக்காக தமது அனுசரணையை வழங்கும் கனடாவில் வசிக்கும்…

மேலும் படிக்க

உதவி கோரல்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வருடந்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. அதற்கிணங்க பாடசாலை ஆரம்பிக்கப்படவிருப்பதால் எமது மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் தாங்கள் முன்வந்து வழங்கும் சிறு உதவியானது (LKR 5,000) வறுமைக்கோட்டின்…

மேலும் படிக்க

சாதனையாளர்களின் சங்கமம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் எம் உறவுகளால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெறும் மாணவர்களில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எமது அறக்கட்டளை உறவுகளான திரு. லவன் சிவராஜா மற்றும் அவரது துணைவி திருமதி. ஸ்ரீநிதி சுப்பிரமணியம், ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அதிபர், பிரதேச செயலகத்தில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் பணிசெய்யும் உத்தியோகத்தர்கள் மற்றும் எமது அனைத்து…

மேலும் படிக்க

இலண்டன் கனகதுர்கை அம்மன் ஆலயத் தலைவரின் மட்டக்களப்பு விஜயம்

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்காக இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினர் ஆலயத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கி சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மனிதநேயப் பணிகளை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதேசத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களைப் பார்வையிடும் வண்ணம் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தலைவர் வைத்தியகலாநிதி. வே. பரமநாதன் அவர்கள்,அறங்காவலர் சபை உறுப்பினர் பேராசிரியர்.ஸ்ரீரங்கன் அவர்கள், அறங்காவலர் சபை உறுப்பினர் திரு. சிவலோகன் அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின்…

மேலும் படிக்க

மாதிரி பாலர் பாடசாலையில் அறக்கட்டளை உறவினரின் பிறந்த தினம்

சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்றது. அந்தவகையில் எமது அறக்கட்டளை உறவான அமெரிக்காவில் வசிக்கும் திரு.திருமதி.தர்மிகா ராஜ் அவர்களின் மகளாகிய செல்வி.அனிக்கா ராஜ் அவர்களின் 5 வது பிறந்த தினம் திருநீற்றுக்கேணி/நலன்புரி பாலர் பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதோடு பிறந்த தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை வளாகத்தினுள் அறக்கட்டளையினரால் மரநடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து…

மேலும் படிக்க

எமது திட்டத்தில் மேலும் ஐந்து புதிய மாணவர்கள்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக செங்கலடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும்…

மேலும் படிக்க

நன்கொடையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையில் திருமதி.தாரணி ராம்ராஜ் அவர்களின் பிறந்த தினம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினரால் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன்…

மேலும் படிக்க

அடிப்படைக் கணினிப் புரட்சி இரண்டாம் அத்தியாயம் !

பின் தங்கிய கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணனி அறிவினை வழங்கும் வண்ணம், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக மனிதநேய நம்பிக்கை நிதியத்தினரின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் பயிற்சி செயலர்வுகள் தொடர் கட்டங்களாக நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சிக்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்றது. பயனுள்ள வகையில் இன்றைய செயலமர்வை…

மேலும் படிக்க