
சக்தி பாலர் பாடசாலையினரின் தைப்பொங்கல் விழா
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் வந்தாறுமூலை/ சக்தி பாலர் பாடசாலையில் தைத்திருநாள் கொண்டாட்டமானது வெகு விமரிசையாக இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். சக்தி பாலர் பாடசாலைக்காக தமது அனுசரணையை வழங்கும் கனடாவில் வசிக்கும்…