சாரதா நிலைய மாணவிகளின் தைத்திருநாள் கொண்டாட்டம்..

உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்துழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் தினமாகும். இந்நாள் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் வெகு விமரிசையாக பொங்கல் விழா அனுஷ்டிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும், சாரதா நிலைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இம்மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை சிறப்பானதாகும். இதற்கான அனுசரணையை…

மேலும் படிக்க

வெள்ளத்தின் சுவடுகள் தாண்டி அனைவர் இல்லங்களிலும் வழி பிறக்க எம்மாலான பொங்கல்பொதி

மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகின்ற சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் செய்து கொண்டாடும் பண்டிகையே தைத்திருநாளாகும். தொடர்ச்சியான கனமழை மற்றும் முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்திலிருந்து பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அடிப்படைக் கணனி பயிலும் கித்துள் பிரதேச மாணவர்கள்…

மேலும் படிக்க

வித்தகராம் விவேகானந்தரின் நெறி நின்று..

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காகவும் தமது ஆணித்தரமான வார்த்தைகள் மூலம், உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வை விழிப்புறச் செய்து எமது சமூகத்தில் ஆன்மீக ஞான ஒளி புகட்டி, மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தி, இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜனன தினமானது எமது விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியில் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும்…

மேலும் படிக்க

உதவி கோரல்

எமது தமிழர்கள் பாரம்பரியமும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில்களை புரிபவர்கள் புது வருடத்தினை வரவேற்பதுடன் இந்த உலகிற்கு ஒளியினையும் சக்தியினையும் கொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை எதிர்வரும் 15 ஆம் திகதி வருகின்றது. தற்போதைய உலக, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தற்போது இலங்கையில் நிலவும் வெள்ள அனர்த்தத்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளே… எனவே இந்த வருடம் பொங்கல் பண்டிகையினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில் மட்டக்களப்பு மற்றும் முல்லைதீவு…

மேலும் படிக்க

அறக்கட்டளையின் பிரதேசமட்ட நகர்வு

இன்றைய சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் நாம் பல்வேறுபட்ட சமூக மட்டத்தினருடனும் இணைந்து செயற்படுகின்றோம். அதனடிப்படையில் பிரதேச செயலகங்களுடனான கலந்துரையாடல் என்பது எமது அறக்கட்டளையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இன்றியமையாததாகும். அதற்கிணங்க ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகங்களில் இடமாற்றம் பெற்று வருகை தந்த புதிய பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு அவர்களுடனான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும்…

மேலும் படிக்க

தலைமைத்துவம் ஒரு நிகழ்வல்ல!!

தலைமைத்துவம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இன்றைய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி அவர்களை நாளைய சமுதாயத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக்குவது எமது கடமைப்பாடாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இன்றைய தினம் இடம்பெற்றது.எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப்பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளூடாகத் தலைமைத்துவப்பண்புகளும், நேரமுகாமைத்துவம் போன்ற…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களின் தேவை ? அடிப்படை ஆங்கிலம் !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர்களை வலுவூட்டும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கடந்த வருடம் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த வருடம் வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கிணங்க அதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. வித்யாலய அதிபர், மாணவர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர்…

மேலும் படிக்க

பல தலைமுறைகள் தாண்டியதோர் நிலைத்திருப்பு, உங்கள் பெயரால் ஓர் மரம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனிமனித வலுவூட்டலினூடாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அவ்வாறே இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக பூமியைக் குளிர்விப்பதற்காக பசுமைப்புரட்சி எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக குறைந்தது 500 மரக்கன்றுகளையாவது நடுதல் அல்லது வழங்குதல் மூலம் இந்த ஆண்டிற்கான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டத்திற்கிணங்க அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் எமது புதிய திட்டமானது அமுல்படுத்தப்பட்டது….

மேலும் படிக்க

விழுதுகளை விதைப்போம் எம்மிடமிருந்தே ..

எமது சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எதிர்கால சமூகத்தை வலுவூட்டும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தலைமைத்துவப்பயிற்சியானது தொடர்ச்சியான ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இதற்கான அடித்தளத்தினை எம்மவரிடமிருந்தே ஆரம்பிக்கும் முகமாக 20 பேர் தெரிவு செய்யப்பட்டு தலைமைத்துவ பயிற்சியின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் இடம்பெற்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட எமது அறக்கட்டளையின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள், அமிர்தா…

மேலும் படிக்க

வீட்டிற்குள் கனமழையின் சுவடுகள் வெள்ளநிவாரணப் பொதியாய் எம் ஆறுதல்..

இயற்கையின் சீற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனாலும் அதன் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் வண்ணம் எம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது எமது கடமைப்பாடாகும். அந்த வகையில் தொடரும் கனமழை காரணமாக வெள்ளத்தினால் அவதியுறும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது கோறளைப்பற்றுப் பிரதேச செயலாளர் திரு.ராஜ்பாபு அவர்கள், இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், விவேகானந்த…

மேலும் படிக்க