ஏழ்மை தீராதெனினும் எம்மால் இயன்ற உதவி..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் வாயிலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகளுடன் நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம் அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட செங்கலடி பிரதேசத்தில் உள்ள பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருடன் நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் இந்நிகழ்வில்…

மேலும் படிக்க

இறைவனைக் கண்டோம் இவர்களின் கண்களில்..

இயேசு பாலகனின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தார் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்களின் மனங்களைக் குளிர்விப்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் மயிலம்பாவளி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது வாழும்கலை நம்பிக்கை கிராம சிறுமிகள் இல்லத்துடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடும் முகமாக அவர்களுக்கான மதிய உணவு , இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள்…

மேலும் படிக்க

இல்லத்தினருடன் இறை தூதனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

உலக மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வண்ணம் இயேசு கிறிஸ்து பிறந்த நாளினை தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடி வருகின்றோம். கிறிஸ்துமஸ் பண்டிகையானது உலகெங்கிலுமுள்ள சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் பரிசுகள் பரிமாற்றப்பட்டு உல்லாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது ஜீவானந்தா மகளிர் இல்லத்தினருடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களுக்கான இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள்…

மேலும் படிக்க

அறக்கட்டளையின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலொன்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர், சமூக மட்டங்களுடன் பணியாற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட அறக்கட்டளையின் சேவையாளர்களும் கலந்துகொண்டனர். எமது அறக்கட்டளையினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தெளிவூட்டலை அறிக்கையிட்டதுடன் இந்த ஆண்டிற்கான எமது அடைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. எதிர்வரும்…

மேலும் படிக்க

விசேட தேவையுடையோருக்காக ஓர் கணனி பயிற்சி மதிப்பீடு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிற உள, உடல் நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடிப்படைக் கணினிப்பயிற்சி , பனையோலைப் பயிற்சி என இம்மாணவர்களுக்கான பயிற்சிநெறிகள் முன்னெடுக்கப்படுவதோடு சத்துணவுப்பொதிகள் வழங்குதல் , விசேட தினங்களுக்கான பொதிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன் அடிப்படையில் இன்றைய தினம் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அடிப்படைக் கணினிப் பயிற்சி நெறிக்கான முதற்கட்ட மதிப்பீடு இடம்பெற்றது. 4 மாணவர்கள்…

மேலும் படிக்க

பின்தங்கிய கிராம மாணவர்களின் தேடலுக்காக எம்மால் ஒரு கணனிப் புரட்சி

கணினி மயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப அறிவானது இன்றியமையாததொன்றாகும். அந்த வகையில் வளர்ந்து வரும் மாணவர் சமுதாயத்தில் ஒவ்வொரு மாணவரும் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். பின் தங்கிய கிராமப் பிரதேசங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவை வழங்கும் வண்ணம் செங்கலடி பிரதேசத்தில் கித்துள் கிராமத்தில் கணினி வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் கிடைக்கப்பட்ட மடிக்கணினிகளை பயன்படுத்தி விவேகானந்த…

மேலும் படிக்க

இவர்களின் புன்னகையில் இறைவனைக் காண..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வரப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளை உறவுகளான செல்வராஜா மேரி கிறிஷாந்த் ஆகியோரின் பிள்ளைகளான மதீசான் மற்றும் கத்தலியா ஆகியோரின் பிறந்த தினமானது எமது புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுடன் இணைந்து விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தினை அடுத்து எமது அறக்கட்டளை உறவான செல்வராஜா குடும்பத்தினரின் உதவியால் மாணவர்களுக்கான சத்துணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது…

மேலும் படிக்க

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அவர்களுடன் நாம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் பாலர் பாடசாலைகள் முக்கியம் பெறுகின்றது. போதியளவு உணவு, கல்வி அறிவு, மேலதிக செயற்பாடுகள் என முறையான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யும் பாலர் பாடசாலைகளுடன் கைகோர்த்து செயற்படுவது எமது தலையாய கடமையாகும் அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டத்தினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இந்த வருடத்திற்குரிய கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது….

மேலும் படிக்க

திறமைகளிருந்தும் தடுமாறும் இளந்தளிர்களின் எதிர்காலம்

திறமையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டங்களின் மூலம் ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்குதல் , மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல் போன்ற செயற்பாடுகளினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம் . அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காகவும் எதிர்வரும் ஆண்டிற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் எம்மால் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள கௌரி பாலர் பாடசாலைக்கான களவிஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. இப் பாடசாலைக்கான நன்கொடை உதவிகள் இலண்டனில் வசிக்கும்…

மேலும் படிக்க

திறமைக்கான ஓர் அங்கீகாரம் தொடரும் மேடைகளின் தேடல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு முறையான மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் எமது திட்டங்களினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம். அந்த வகையில் 2023 ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளுக்காக மேற்பார்வை செய்யும் வண்ணம் எம்மால் கனடாவில் வசிக்கும் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தின் நிதியுதவி கிடைக்கப்பெறும் பலாச்சோலை விபுலானந்தா பாலர் பாடசாலைக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு இவ் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஆண்டில் அவர்களுடனான எமது செயற்பாடுகள் பற்றியும் தெளிவூட்டப்பட்டது. பாலர்…

மேலும் படிக்க