மாற்றத்திற்கான மாணவர் சமுதாயத்தின்ஓர் புதிய அத்தியாயம்
இன்றைய நவீன யுகத்தில் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாததொன்றாகும். சிறு வயது முதல் மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படை கணினி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும். இதற்காக முன்னேற்றகரமான ஒரு தொழில்நுட்ப அறிவுடனான சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை கணினி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். இதன் பிரகாரம் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல்முகத்துவரத்தில் அமைந்துள்ள துவாரகா பாடசாலைக்கு களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தோம். கணினிப்பயிற்சியின் அவசியம்,…