கனவுகளெல்லாம் கற்களின் வழியே ..!!
எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமுதாயத்தில் தேவைப்பாடுடைய பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.புவிக்குமார் தர்மினி ஆகியோரின் மகன் டிலன் என்பவரின் 12 வது பிறந்த தினத்தை முன்னிட்டுஆரையம்பதி செல்வாநகர் பிரதேசத்தில் வசிக்கும் திருமதி.இ.தனலெட்சுமி அவர்களுடைய பூரணமாக்கப்படாமல் தகரத்தினால் இருந்த வீடு திருத்தங்கள் செய்யப்பட்டு கற்களால் பூரணப்படுத்தப்பட்டது. திருமதி.இ.தனலெட்சுமி கணவரைப் பிரிந்த நிலையில் மரக்கறி வியாபாரம் செய்து பாடசாலை செல்லும் இரு…