தன்னார்வ தொண்டர்களுடனான கலந்துரையாடல்

இன்றைய இளம் தலைமுறையினரிடையே சேவை மனப்பாங்கை கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் எம்முடன் இணைந்து பணியாற்றும் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களுடனான வருடாந்த கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டலை அடுத்து எதிர்வரும் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றியும் அறக்கட்டளையுடனான அவர்களின் பயணம் தொடர்பிலும் தெளிவாகக் கலந்துரையாடப்பட்டது. எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க

கல்வி ஏக்கங்களுடன் சிறுவர் காப்பகங்களில்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்டபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10…

மேலும் படிக்க

விவேகானந்த கலாச்சார நிலைய பணிப்பாளரின் வருகை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர் யுவதிகளின் வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து எமது கல்லூரியின் பயிற்சிநெறிகள் மற்றும் எமது செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் பயிற்சிகள் பற்றிய விளக்கங்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டது. இவ்வாறான திறன்…

மேலும் படிக்க

தற்போதைய இளைஞர்களும் செயற்பாடும்

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் எமது விவேகானந்த இளைஞர் கழகத்தினரால் ஜீவானந்தா இல்லத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களும் ஜீவானந்தா இல்லத்தில் வசிக்கும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களிடைய சமூகம் பற்றிய சிந்தனையினை உருவாக்கவதுடன், மாணவர்களிடையே சூழலை சுத்தம் செய்வதன் அவசியம்…

மேலும் படிக்க

பெற்றோருக்கான தெளிவூட்டல்..!!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வலுவூட்டலை வழங்கும் வண்ணம் சிறுவர் பராமரிப்பு திட்டம் எனும் தொனிப் பொருளில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பாலர் பாடசாலைகளுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் பயிலும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. எமது சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டில் எமது திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாது அவர்களுக்கான எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டமை சிறப்பானதாகும். இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எம்முடன் இணைந்து செயலாற்றிக்…

மேலும் படிக்க

கனவுகளெல்லாம் கற்களின் வழியே ..!!

எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமுதாயத்தில் தேவைப்பாடுடைய பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.புவிக்குமார் தர்மினி ஆகியோரின் மகன் டிலன் என்பவரின் 12 வது பிறந்த தினத்தை முன்னிட்டுஆரையம்பதி செல்வாநகர் பிரதேசத்தில் வசிக்கும் திருமதி.இ.தனலெட்சுமி அவர்களுடைய பூரணமாக்கப்படாமல் தகரத்தினால் இருந்த வீடு திருத்தங்கள் செய்யப்பட்டு கற்களால் பூரணப்படுத்தப்பட்டது. திருமதி.இ.தனலெட்சுமி கணவரைப் பிரிந்த நிலையில் மரக்கறி வியாபாரம் செய்து பாடசாலை செல்லும் இரு…

மேலும் படிக்க

கிராமங்கள் தோறும் கணினி வகுப்புக்கள் !

கிராமங்கள் தோறும் கணினிப்புரட்சி எனும் தொனிப் பொருளில் கிராமங்களுக்குச் சென்று வாராந்த வகுப்புக்களை நடத்துவதன் மூலம் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி அறிவினை நாம் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் உலகம் தொழில்நுட்பத்தின் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்க நம் சமூகத்தில் கணினியினை பயன்படுத்திக் கூட பார்க்காத இளம் சந்ததி இருக்கத்தான் செய்கின்றது. எனவே கிராமந்தோறும் அவர்களை மையப்படுத்தி 3 மாதகாலத்திற்கு ஒரு கிராமத்தில் மடிக்கணினிகள் மூலமாக நடமாடும் பயிற்சியாக நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு இரண்டாவது கிராமமாக ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட…

மேலும் படிக்க

கழிவுப்பொருளே மூலதனம்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கிராமங்களை நோக்கிய இளைஞர், யுவதிகளின் வலுவூட்டல் செயற்பாட்டின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த சமுதாய கல்லூரியின் இன்னுமொரு செயற்பாடாக நேற்று 22.11.2024 திகதி வள்ளிபுனம் ரேடியன் நிலையத்தில் சிரட்டையிலான கைவினை ஆக்க பயிற்சி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ள ஆர்வமாக உள்ள இளம்பெண்கள் என 20 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களிற்கு இவ்வாறாக கழிவுப்பொருட்களை கொண்ட…

மேலும் படிக்க