சிட்டுப் பூச்சிகளான சிறுவர்களை நாம் மகிழ்விப்போம்

உலகின் மாற்றங்களோ உளவியல் தாக்கங்களோ எதுவுமே தெரியாமல் இன்பமாய் வாழ வேண்டும் என சிறுவர்களிற்காகவே ஒரு சர்வதேச தினம் ஒக்டோபர் 1. உலக சிறுவர்கள் தினத்தில் அவர்களை நாமும் மகிழ்விப்போம். பல்வேறு கஸ்டமான குடும்ப சூழ்நிலைகளில் இருந்து பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறுவர்களிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எம் அறக்கட்டளை உறவுகள் 5 பாடசாலைகளை பொறுப்பெடுத்து நாம் நடாத்த உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த வயதில் அவர்கள் மனதில் உள்ள அந்த மகிழ்வு தான் எதிர்காலத்தில் அவர்களின் மனநிலையும் நடத்தையும் ஆகவே…

மேலும் படிக்க

தடைகள் களைவோம்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்டு எம்மால் பொறுப்பெடுக்கப்பட்ட, உயர்தரம் பயிலும் 4 மாணவர்களின் கோரிக்கைக்கமைவாக அவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் கள சேவையாளர்களால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது இவ்வாறான செயற்பாடுகளுக்காக அனுசரணையை வழங்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர்…

மேலும் படிக்க

மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல்

மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற Office management & IT இரண்டாவது தொகுதி மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் நடைபெற்றது. கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் இப் பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான விளக்கத்தைத் தொடர்ந்து அடிப்படையான கணினி…

மேலும் படிக்க

தடைகளை படிகளாக்குவோம் ..

வறுமைக் கோட்டிற்குக் கீழான பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையில் இடம்பெற்றதோடு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளரால் அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.மகேஸ்வரன்…

மேலும் படிக்க

வாழ்வியல் ! மாணவர்களுக்கானதோர் மேடை

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட, க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் சித்தியடையாத மாணவர்கள் வழிதவறிவிடாமல் அவர்களிற்கும் ஒரு வழி இருக்கின்றது என்பதனை உணர்த்தும் வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் விசேட பயிற்சியினை வடிவமைத்து வருடாந்தம் இதன் மூலம் 600 வழிதெரியாமல் திண்டாடும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டலை மேற்கொள்ளும் வகையிலான எமது திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இவ்வருட முதலாம் தொகுதி…

மேலும் படிக்க

மாணவர் ஒருவருக்கான பாதணி

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக அவருக்கான பாதணி எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய திரு.காந்தரூபன் அவர்களுக்கு எமது…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்கான மேலதிக வலுவூட்டலுக்காக ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை நடைமுறுப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில், கறுவாக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களை மேற்பார்வை செய்யும் வண்ணம் எமது திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் பெறுபேறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களுக்கான மேலதிக வகுப்புகள்…

மேலும் படிக்க

முழுவதுமாகத் தீர்க்க முடியாதெனினும்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகக் காணப்படும் ஆலங்குளம் கிராமம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட சிரமத்தை எதிர்நோக்கும் அதிகஷ்டப் பிரதேசமாகும். இக்கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியதொரு பிரச்சினையாகும். அந்தவகையில், ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் முதன் முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்தவிருக்கும் அதேவேளை அந்நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் போத்தலை பரிசாகக் கொடுப்பதற்காக எமது அறக்கட்டளையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வேண்டுகோளுக்கிணங்க எமது அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பப்பிரிவு…

மேலும் படிக்க

மாற்றம் கிராமத்தில் இருந்து…

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க”கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் அடிப்படைத் தேவையாக உள்ள கல்வி, கலாச்சார, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது…

மேலும் படிக்க

எமது கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறை நிர்மாணம்

மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது அடிப்படைக்கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவை மையப்படுத்தியதாகப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஒரு செயற்பாடாக ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று உருவாக்கப்பட்டதோடு எமது கல்லூரியின் ஸ்தாபகர்.திரு.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது விவேகானந்த குடும்பத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், எமது அறக்கட்டளையின் திட்ட…

மேலும் படிக்க