நாளைய தலைவர்களுக்காக நாம்
நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப சிறந்த தலைவர்களை உருவாக்குதல் எனும் அடிப்படையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர் கட்டங்களாக மாதாந்தம் இருமுறை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கான இரண்டாவது செயலமர்வானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்களின் ஆற்றுகையின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உட்பட எமது சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள முறையில் முரண்பாடுகள் எனும் கருப்பொருளில்…