அன்னை ஸ்ரீ சாரதா நிலையம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறே எமது சாரதா நிலையத்தின் மாணவிகள் கராத்தே, யோகா, சிரட்டைக் கைத்தொழில், ஆரிவேர்க் போன்ற பல்வேறு பயிற்சிகளிலும் சிறந்து…