களம் அமைப்போம்..
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையை வழங்கும் வண்ணம் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில் எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளரான திருமதி.தங்கமலர் கணேசராஜா அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாடானது வாழ்வாதார ஊக்குவிப்பாக மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்குமான கல்வி…