கிராமங்களை நோக்கிய பயணங்கள்…

பாடசாலைக் கல்வியின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் பின்தங்கிய கிராமங்களில் தேக்கமடையும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தூரநோக்குடன் அவர்களின் வாழ்க்கையினை திட்டமிடவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படும் சில குறிப்பிட்ட திறன்களை அடையாளப்படுத்தி அவற்றினை நிபர்த்தி செய்திடும் ஒரு செயற்பாடாகும். AU Lanka & Child Fund நிதி அனுசரணையில் எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையும் இணைந்து வவுணதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம…

மேலும் படிக்க

கல்வி மற்றும் தகவல் வறுமை…

வறுமை என்பது உணவினால் என்பதனை விட, எமது மாவட்டத்தில் கல்வி மற்றும் தகவல் வறுமையுமே அதிகம் காணப்படுகின்றது. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பற்றி தெரியவில்லை,பல்கலைக்கழகங்கள் பற்றிய தெளிவில்லை, மட்டக்களப்பில் திறந்த பல்கலைகக்கழம் இருப்பது தெரியவில்லை, அரசினால் உயர் கற்றலுக்கு மாணவர்களிற்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரியவில்லை, க.பொ.த உயர்தரத்திற்கு பின்னரான அவர்களின் வாழ்க்கை திட்டமிடல் பற்றி தெரியவில்லை.. ஆனால் பல்கலைகழகம் கட்டாயம் செல்வேன் என்று மட்டும் கூறுகின்றனர். உயர்தரத்தில் 3 பாடங்களில்…

மேலும் படிக்க

தொடரும் பயணங்களில்….துவங்கும் புத்தாண்டு !

குரோதி வருடம் இனிதே பிறந்து விரோதங்கள் இன்றி யாவர்க்கும் நன்மையளித்து வறுமை நீங்கி செம்மையுற்று அனைவரும் செழிப்புடன் வாழ தமிழ்ப்புத்தாண்டாம் சித்திரையை நாம் சிறப்பாக வரவேற்பது எம் தமிழ் மரபு. சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கிய எமது பயணத்தில் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழப் பிரார்த்திப்பது எமது வழக்காறாகும். அந்த வகையில் விவேகானந்த குடும்பத்தினரின் சித்திரைக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் சமூக நலன்புரியமைப்பின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலைய…

மேலும் படிக்க

புத்தாண்டை முன்னிட்டு

புதிய தொடக்கத்தை குறிப்பிடும் புத்தாண்டு தினமானது அறிவு மற்றும் அன்பைக் கொண்டு வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி புத்தாடை அணிந்து கோயில் சென்று வழிபாடு செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. அதற்கிணங்க எமது திட்டங்களினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும், இல்லங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் புத்தாண்டை வரவேற்க அவர்களுக்கான புத்தாடைகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பது எமது கடமையாகும். அந்த வகையில் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லம், மயிலம்பாவளி வாழும் கலை நம்பிக்கைக் கிராமம் மற்றும் முல்லைத்தீவு…

மேலும் படிக்க

நாளைய தலைமுறையினருக்காக நாம் ..

இன்றைய சிறுவர்களைப் பொருத்தமான முறையில் ஆற்றுகைப்படுத்துவதன் மூலம் நாளைய தலைவர்களை சிறப்பான முறையில் உருவாக்க முடியும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது சமுதாயத்தின் இளைஞர்கள், பெண்கள், பின் தங்கிய கிராமப் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமங்களுக்கு சென்று மற்றும் எமது திட்ட பிரதேசங்களுக்கு சென்று வாழ்வியல் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவிகளுக்கான வாழ்வியல் பயிற்சியானது இன்றைய…

மேலும் படிக்க

பன்னிரு அகவை கடந்ததின்று!

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நெறி நின்று, அவரது கம்பீரமொத்த தோற்றம் கொண்டு, அவர் தம் உருவச்சிலையைத் தமது அடையாளமாகக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தரம் கண்டு புதுக்குடியிருப்பு நகர் தன்னில் சுவாமியின் நாமத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இன்று தனது 12 வது அகவை தினத்தை செவ்வனே கடக்கின்றது. எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் வழியே எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் முகாமைத்துவத்தில் மிகவும் திறம்பட நடத்தாப்பட்டுக்…

மேலும் படிக்க

பிரதேச செயலகத்தினருக்கு வாழ்வியல் பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தான் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் தாண்டி அவற்றை மன தைரியத்துடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான மென் திறன் பயிற்சியே வாழ்வியலாகும். அந்த வகையில் இன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கிராமங்களில் இளைஞர்கள், மாணவர்களுக்காக பணிபுரியும் சேவையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத் திறன் பயிற்சி பெற்ற அணியினரால் சிறப்பான முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது. குழுவாக வேலை செய்தல் பிரச்சினைகளை தீர்த்தல்…

மேலும் படிக்க

அனைவர்க்கும் புத்தாடை !

இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது. அதன் பிரகாரம் தமிழர் தம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மருத்துநீர் வைத்து புத்தாடை அணிந்து ஆலயம் சென்று பெரியவர்களிடம் கைவிசேடம் பெறுவது மரபாகும். அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது மாணவர்களுக்கான புத்தாடைகளை சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் வழங்கிவருகின்றது. அவ்வாறே பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டிற்காக மட்டக்களப்பு, மற்றும் முல்லைத்தீவில் அமைந்துள்ள சிறுமிகள் பராமரிப்பு…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்காய், நாம் !

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பின் தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த உதவித்தொகையொன்றினை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான எமது பங்களிப்பை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் திரு.சுப்பிரமணியம் ராஜு கபீரியல் அவர்கள்…

மேலும் படிக்க

வாழ்வியலும் வழிகாட்டலும்

அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காகக் கையாளப்படும் வாழ்வோடு இணைந்த முறையே வாழ்க்கை திறனாகும். முறையானதோர் இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வாழ்க்கைத்திறன் பாரியளவிலான தாக்கம் செலுத்துவது இன்றியமையாததொன்றாகும் அந்த வகையில் முல்லைத்தீவு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வாழ்வியலும் வழிகாட்டலும் எமது பயிற்சி உத்தியோகத்தர் திரு.ஜெயம் ஜெகன் அவர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதோடு பிரச்சினைகளைத் தீர்த்தல் தொடர்பான வழிகாட்டல் பயிற்சி செயற்பாடுகளூடாக மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்வாறான வாழ்வியல் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக…

மேலும் படிக்க