கல்வி ஏக்கங்களுடன் சிறுவர் காப்பகங்களில்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்டபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10…

மேலும் படிக்க

இரக்கப்படுவதை விட அவர்களை சிறக்கப் பண்ணுவோம்.

ஆரையம்பதியில் உடல், உள நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள், மாணவர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த புகலிடம் நிலையத்தின் செயற்பாட்டிற்கு நிதியுதவி இல்லாமல் போனதையிட்டு எமது அறக்கட்டளையினை அவர்கள் நாடியபோது. அங்கு வரும் இறைவனின் குழந்தைகளான அவர்களிற்கு சத்துணவு பொதிகளை வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன்வந்தன. அதன் அடிப்படையில் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் நண்பர்கள், உறவுகள் இவர்களிற்கான கணினி பயிற்சி மற்றும் ஏனைய போக்குவரத்து செலவுகளுக்கான நன்கொடையினை கடந்த வருடம் வழங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து இவ்வருடம்…

மேலும் படிக்க

ஜீவானந்தா.. பெண்களுக்காய் ஓர் இல்லம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஆறு திட்டங்களினூடாகப் பல்வேறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத்திட்டம் மற்றும் விசேட தேவையுடையோர்க்கான திட்டங்களின் மூலம் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமதுbபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 10 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு எமது மாணவர்களைப்…

மேலும் படிக்க