19 மாணவர்களுக்கான புத்தகப்பை
சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய பிரதேசங்களை மையப்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வருடாந்தம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர்களின் கோரிக்கைக்கமைவாக வழங்கி வருகின்றது.
அந்த வகையில், மட்/ஆரையம்பதி/ செல்வாநகர் சிவா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க தரம் 1 இற்குப் புதிதாக வருகை தரும் 19 மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது கல்லூரியின் அதிபர் திரு.சந்திரசேகரம் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய திரு.ரகுபதி நடராஜா அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



school bags for 19 students
The Vivekananda Community Foundation, which carries out its activities focusing on needy areas through initiatives for social change, annually provides learning materials to students based on their requests.






Accordingly, in response to the request of the Principal of Batticaloa/Araiyampathy/Selvanagar Siva Vidyalayam, school bags were distributed to 19 students who are newly enrolling in Grade 1. It is noteworthy that the Principal of our college, Mr. Chandrasekaram, also graced the occasion with his presence.
We hereby extend our sincere thanks to Mr. Ragupathy Nadaraja for providing his sponsorship through our foundation for this initiative.




