முல்லைத்தீவில் உள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு களவிஜயம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை என்பது கல்வி, சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு சமூக சேவை அமைப்பாகும். பின்தங்கிய சமூகங்களை மையமாகக் கொண்டு, குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த அறக்கட்டளை தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
உதவி பெறுபவர்களை வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களை தன்னிறைவு பெற்ற சமூக உறுப்பினர்களாக உருவாக்குவதே விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வி உதவி திட்டங்கள், மாணவர் வலுவூட்டல் செயல்பாடுகள், இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


2019 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், இன்று பல மாணவிகளின் கல்வி பயணத்திற்கு உறுதியான ஆதாரமாக விளங்கி வருகிறது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உதவியுடன், உணவு, உடை, வழிகாட்டுதல் மற்றும் ஒழுக்க வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பணியாளர்கள், 06.02.2026 தொடக்கம் 08.02 2026 வரை முல்லைத்தீவில் உள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது, அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஊடாக பயன் பெறும் மாணவர்களை சந்தித்த VCOT குழுமத்தினர், அவர்களுடைய தற்போதைய கல்வி அடைவு நிலை மற்றும் எதிர்காலத்தில் மேலதிகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டனர். இதனுடன், சாரதா நிலையத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் ஆசிரியர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறாக, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை அன்னை ஸ்ரீ சாரதா நிலையம் மற்றும் மட்டக்களப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி ஆகியவை ஒன்றிணைந்து, கல்வி மற்றும் சமூக மாற்றத்தை நோக்கிய ஒரே குடும்பமாகச் செயல்படுகின்றது.
An inspection visit to Annai Sri Sarada Centre in Mullaitivu
The Vivekananda Community Foundation is a social service organization that has been implementing various programmes in the fields of education, social development, environmental protection, and livelihood development. With a focus on marginalized communities, the foundation carries out its services with the aim of improving the quality of life of children, students, youth, and women.
Rather than viewing those who receive assistance merely as beneficiaries, the primary objective of the Vivekananda Community Foundation is to nurture them into self-reliant and empowered members of society. Based on this principle, a range of initiatives are being implemented, including educational assistance programmes, student empowerment activities, youth skill development training, and livelihood support programmes for families.
The Annai Sri Sarada Centre, established in 2019 at Puthukkudiyiruppu, Mullaitivu by the Vivekananda Community Foundation, has today become a strong pillar of support for the educational journeys of many girl students. Along with educational assistance, students here are provided with food, clothing, guidance, and support for moral and character development.
Furthermore, the staff members of the Vivekananda College of Technology, Batticaloa, together with the Vivekananda Community Foundation, carried out a field / inspection visit to the Annai Sri Sarada Nilayam in Mullaitivu from 06.02.2026 to 08.02.2026.



During this visit, the VCOT team met with the students benefiting through the Annai Sri Sarada Centre and engaged in discussions with both students and teachers to understand the students’ current academic progress and the additional needs to be addressed in the future. In addition, extensive discussions were held with the teachers regarding the development and future plans of the Sarada Centre.
In this manner, the Vivekananda Community Foundation, Annai Sri Sarada Centre, and the Vivekananda College of Technology, Batticaloa function together as one family, working collectively towards education-driven social transformation.

