பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்துரையாடல்
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத்தொகை ஒன்றினை மாதாந்தம் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலில் ஒரு புதிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் செயற்பாட்டில் கடந்த 2 வருட காலமாக 7 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது தொகுதியாக ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையத்தில் பயிலும் மலையகத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டு கடந்த 6 மாதகாலமாக தமக்கான ஊக்குவிப்புத்தொகையினைப் பெற்று வருகின்றனர். அந்தவகையில் தற்போது மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான தேர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.



எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 8 மாணவர்கள் கலந்துகொண்டதோடு இத்திட்டம் தொடர்பான பூரண விளக்கங்களும் வழங்கப்பட்டு மாணவர்களை தெரிவுசெய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion for University Students
Our Vivekananda Community Foundation has been identifying underprivileged and needy students and providing them with a monthly educational incentive allowance to encourage and support their learning.
As part of this initiative, a new program aimed at strengthening student development and empowerment was launched, through which monthly incentive allowances are provided to university students. Over the past two years, seven students were selected and benefited from this program.
As the second batch of beneficiaries, eleven students from the Hill Country community studying at the Swami Vipulananda Institute of Aesthetic Studies (SVIAS), who were affected by the Ditwa cyclone and subsequent floods, were selected. These students have been receiving their incentive allowances for the past six months.



In this context, the selection process for the third batch of students was recently conducted at Vivekananda College Of Technology.
The discussion, held under the leadership of the Executive Director of our Foundation, was attended by eight students. During the session, comprehensive information about the program was provided, and discussions were held regarding the selection of students for the scheme.


