|

5 மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள்

பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 60 மாணவிகளை மையப்படுத்தியதாக மாணவிகளின் வலுவூட்டலுக்கான அந்தவகையில் மாணவிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமைவாக 5 மாணவிகளுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து பாடசாலைக்கு நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த 5 மாணவிகளுக்கு இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.வாமதேவன் அமர்நீதி அவர்களுக்கும் மாணவிகள் சார்பிலும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Bicycle Distribution for 5 Students

With the support of our diaspora well-wishers, our foundation has been carrying out various initiatives aimed at empowering female students from underprivileged regions and families living below the poverty line.

As part of these efforts, the Annai Sri Sarada Centre, located in the Puthukkudiyiruppu area of Mullaitivu District, serves as a focal point for the empowerment of 60 female students. Based on requests received from the students, bicycles were provided to five students. This support is particularly significant as these students were compelled to travel long distances from their homes to school on a daily basis.

On behalf of the students and the Vivekananda Community Foundation, we extend our heartfelt gratitude to the Balachandran family from Australia and Mr. Vamadevan Amarneethi from the United States for their generous sponsorship through our foundation, which made this initiative possible.

Similar Posts