விவேகானந்த சமுதாய கல்லூரி மாணவர்களுக்கான நாற்காலிகள்
பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தேவைப்பாடுடைய சமுதாயத்தினரை மையப்படுத்தி சமூக மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு செயற்பாடாக, காரைதீவில் இராமகிருஸ்ண மிஷனுடன் இணைந்து மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் நடைபெறும் எமது விவேகானந்த சமுதாய கல்லூரியில் தற்போது புதிய செயற்பாடாக பின்தங்கிய பிரதேச மாணவர்கள், இளைஞர்களிற்கு அடிப்படை கணினி அறிவு, ஆங்கிலம் மற்றும் வாழ்வியல் பயிற்சியையும் உள்ளடக்கியதாக Careerfit & IT பாடநெறி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் அவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கணினிகள் மற்றும் வகுப்பறை நாற்காலிகள் தேவையாக இருந்தது.


அதற்கேற்ப எமது கோரிக்கைக்கமைவாக அம்மாணவர்களுக்கு நாற்காலிகளை பெற்றுக்கொடுப்பதற்கான பங்களிப்பினை மேற்கொண்டமைக்காக அமெரிக்காவில் வசிக்கும் திரு.S.லோகேந்திரா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது மிகவும் பெருமிதம் அடைகின்றது.

Chair Support for Students of Vivekananda Community College, Karaitivu
With the theme of “Social Empowerment for Transformation,” our Vivekananda Community Foundation has been implementing various community development initiatives with the support of diaspora well-wishers, focusing on underprivileged communities living in rural and economically disadvantaged areas below the poverty line.
As one of these initiatives, our Vivekananda Community College, which operates in collaboration with the Ramakrishna Mission in Karaitivu with the support of Manitha Neyam Trust, recently launched the CareerFit & IT Programme. This programme is designed to provide students and youth from underprivileged communities with basic computer literacy, English language skills, and life skills training. With the increasing number of students enrolling in the programme, there arose a need for computers and classroom chairs to facilitate their learning activities.

Accordingly, the Vivekananda Community Foundation is pleased to extend its sincere gratitude to Mr.S.Logendra, residing in the United States, for his generous contribution towards providing chairs for these students in response to our request. We are deeply grateful for his valuable support in strengthening educational opportunities for underprivileged youth.
