கரடியானாறு மாணவர்களின் கல்விச் சாதனைக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்போம் !
பின்தங்கிய மற்றும் வளங்கள் குறைந்த பிரதேசங்களில் வாழும் மாணவர்களை மையப்படுத்தியதாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளை மட்டக்களப்பு கரடியானாறு இந்து வித்தியாலயத்திலிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமைவாக எமது அறக்கட்டளையின் நீண்டநாள் நன்கொடையாளராகிய அமெரிக்காவைச் சேர்ந்த திரு.வாமதேவன் அமர்நீதி அவர்களின் அனுசரணையுடன் இயல்பாக எழுதுவதற்கு மற்றும் வாசிப்பதற்கும் சிரமத்தை எதிர்கொள்ளும் 37 மாணவர்களுக்காக செயற்றிட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு – https://vcf.lk/empowerment-for-slow-learners/
அந்த வகையில் இம்மாணவர்கள் தற்போது நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியதோடு மாத்திரமின்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைக் கடந்து சித்தியடைந்துள்ளனர்.
- மேலும் 22 மாணவர்கள் 71 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கிராமப்புறச் சூழலின் பல சிரமங்களுக்கு மத்தியிலும் இம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் இதர கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த திரு.வாமதேவன் அமர்நீதி அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



இம் மாணவர்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையிலும் கரடியானாறு இந்து வித்தியாலயத்தின் அதிபர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் 22 மாணவர்களுக்கான கௌரவப் பதக்கங்களை வழங்குவதற்கான தேவை காணப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் இச்சிறுவர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமன்றி இவர்களைப் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும். அது பின்தங்கிய மற்றும் வளங்கள் குறைந்த பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் கல்வி இடைநிறுத்தங்களையும் குறைக்கும்.
அதற்கான அனுசரணையை வழங்க விரும்புபவர்கள் எம்முடன் இணைந்து உங்கள் உதவியினை வழங்க முடியும்.
நம் பிள்ளைகளின் வெற்றிக்கு நாமும் ஒரு சிறு கைம்மாறு செய்வோம் !
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை (VCF)
மட்டக்களப்பு
www.vcf.lk
Recognizing the Educational Achievements of Karadiyanaru Students
Vivekananda Community Foundation (VCF) continues to implement various projects with the support of our diaspora partners, focusing on students living in underprivileged and resource-limited communities.
In response to a request received from Karadiyanaru Hindu Vidyalayam, Batticaloa, we are currently implementing a project for 37 students who experience difficulties with basic reading and writing skills, with the generous support of our long-standing donor, Mr. Vamadevan Amarneethi from the United States.
For more details:
https://vcf.lk/empowerment-for-slow-learners/






It is noteworthy that these students not only sat for the recently conducted Grade 5 Scholarship Examination but also achieved encouraging results.
- 4 students successfully achieved the required cut-off marks.
- A further 22 students scored more than 71 marks, demonstrating significant progress.
Despite the many challenges faced by students living in rural communities, their achievements are a testament to their determination and potential. We sincerely thank Mr. Vamadevan Amarneethi from the United States for supporting this initiative by providing teacher allowances and essential learning materials.
To recognise and celebrate the achievements of these students and encourage them to continue their educational journey, Karadiyanaru Hindu Vidyalayam has requested support to provide recognition medals to 22 students.
Such recognition can motivate these students while also inspiring other children facing similar challenges to believe in their own potential. It can further encourage interest in education among students from underprivileged and resource-limited communities and contribute towards reducing educational disengagement and school dropouts.
Those who wish to support this initiative and encourage these students are warmly invited to join us in making a contribution.
Let us make a small contribution towards celebrating and supporting the success of our children!
Vivekananda Community Foundation (VCF)
Batticaloa
www.vcf.lk
