கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மடிக்கணினிகள் மற்றும் புரொஜெக்டர் உத்தியோகபூர்வமாக கையளிப்பு
பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தேவைப்பாடுடைய சமுதாயத்தினரை மையப்படுத்தி சமூக மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இணைந்து எமது புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் விழிப்புணர்வு வழிகாட்டல் மற்றும் தொழிற்பயிற்சி மேம்பாடுகளை மேம்படுத்தும் வகையிலாக பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் இளைஞர்களிற்கு அடிப்படை கணினி அறிவை வழங்குவதற்காக மடிக்கணினிகனை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று அவர்களுக்கான 3 மாதகால பயிற்சிகள், விழிப்புணர்வு செயற்பாடுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் குறுகியகால பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மாவிலங்கத்துறை, செல்வாநகர் மற்றும் சிகரம் ஆகிய பிரதேசங்களில் இப்பியிற்சி நெறிகள் ஏலவே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கிணங்க எமது அறக்கட்டளையினூடாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.ரகுபதி நடராஜா அவர்கள் 5 மடிக்கணினிகள், Projector மற்றும் அதனுடன் தொடர்பான உபகரணங்களையும் வழங்கிவைத்ததைத் தொடர்ந்து அவ்வுபகரணங்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லுரியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இச்செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக நடாத்துவதற்காக எமக்கு அனுசரணை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.ரகுபதி நடராஜா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது மிகவும் பெருமிதம் அடைகின்றது.


Official Handover of Laptops and Projector to Vivekananda College of Technology for Rural Digital Education
With the theme of “Empowering Social Transformation,” the Vivekananda Community Foundation, in collaboration with the Vivekananda College of Technology and with the generous support of our expatriate community, has been carrying out a range of initiatives to enhance educational awareness, student guidance, and vocational skills development among students across the district. These efforts are primarily focused on underprivileged communities living in remote rural areas and below the poverty line.
As part of these initiatives, we have been conducting three-month basic computer literacy training programmes for students and youth in disadvantaged villages by taking laptop computers directly to their communities. In addition, awareness programmes, training workshops, and short-term skill development courses are regularly organized. These training programmes have already been successfully implemented in Mavilangathurai, Selvanagar, and Sigaram.
In support of this initiative, Mr. Ragupathy Nadarajah from Australia generously donated five laptop computers, a projector, and related equipment through our Foundation. Following the donation, these resources were officially handed over to the Vivekananda College of Technology to facilitate the implementation of the training programmes.
The Vivekananda Community Foundation takes great pride in expressing its sincere gratitude to Mr. Ragupathy Nadarajah of Australia for his generous sponsorship and invaluable support, which has enabled us to carry out these community development initiatives more effectively and efficiently.


