|

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் மேலும் 5 மாணவிகளுக்கான துவிச்சக்கர வண்டிகள்

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 60 மாணவிகளை மையப்படுத்தியதாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் மாணவிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமைவாக 5 மாணவிகளுக்கான துவிச்சக்கர வண்டிகள் ஏலவே வழங்கப்பட்ட நிலையில் மேலும் 5 மாணவிகளுக்கு இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.பிரேம ஞானபரன் அவர்களுக்கும் திரு.மிதிலன் பாலச்சந்திரன் அவர்களுக்கும் மாணவிகள் சார்பிலும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

5 Bicycles Donated to Students at Annai Sri Sarada Centre

With the support of our overseas well-wishers, the Vivekananda Community Foundation has been implementing various initiatives aimed at empowering and transforming the lives of girls from families living below the poverty line.

As part of these efforts, Annai Sri Sarada Centre, which carries out its activities focusing on 60 girls in the Puthukudiyiruppu area of the Mullaitivu District, had previously received and distributed bicycles to 5 girls based on requests made by the students. It is noteworthy that an additional 5 bicycles have now been provided to another group of 5 deserving students.

On behalf of the students and the Vivekananda Community Foundation, we sincerely express our heartfelt gratitude to Mr. Prema Gnanaparan and Mr. Mithilan Balachandran from Australia for extending their generous support through our Foundation to make this initiative possible.

Similar Posts