|

மாவிலங்கத்துறை கிராமத்தின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 4 மடிக்கணினிகள் கையளிப்பு

டுபாய் நாட்டில் உள்ள R K L Lanka Electromechanical works Contracting LLC நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. ரிஸான் மன்சூர் மற்றும் திரு. நல்லதம்பி உதயகுமார் ஆகியோர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, புதுக்குடியிருப்பிற்கும் விஜயம் மேற்கொண்டு கல்லூரி மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் வலுவூட்டல் செயற்பாடுகளைப் பார்வையிட்டு கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பங்களிப்புகள் தொடர்பிலும் அறிந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை கிராமத்தை மையப்படுத்தி கிராமிய மக்களின் கல்வி சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 வருடங்களாக மாதிரிக் கிராமமாகத் தெரிவுசெய்யப்பட்ட இக்கிராமத்தில் மாணவர்களுக்கான மேலதிக மொழிக் கல்வி, கல்வி ஊக்குவிப்ப, இளைஞர் வலுவூட்டல் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வருகைதந்த R K L Lanka Electromechanical works Contracting LLC நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. ரிஸான் மன்சூர் மற்றும் திரு. நல்லதம்பி உதயகுமார் ஆகியோர் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் செயற்பாடுகளை நேரில் பார்வையிடும் நோக்கில் மாவிலங்கத்துறை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, கிராமத்தில் மாணவர்களின் கணினி அறிவையும் தகவல் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கிலும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் முன்னெடுக்கப்படும் கிராமங்களில் கணினி கற்கை பிரிவு என்ற செயற்பாட்டினை அடிப்படையாக கொண்டு மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்களுக்கு கணினி கற்கை அலகினை உருவாக்குவதற்காக நான்கு மடிக்கணினிகள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கிராமப்புற மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பக் கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் இப்பங்களிப்பானது அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு உறுதுணையாக அமையும்.

அதனை தொடர்ந்து, மண்முனைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான புகலிடம் நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான சத்துணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விஜயத்தின் ஊடாக எமது செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டு எமது சமூக மேம்பாட்டு முயற்சிகளுடன் இணைந்து பங்களிப்புச் செய்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. ரிஸான் மன்சூர் மற்றும் திரு. நல்லதம்பி உதயகுமார் ஆகியோருக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Four Laptops Donated to Support Educational and Technological Development in Mavilangathurai Village

Mr. Rizan Mansoor and Mr. Nallathamby Uthayakumar, Directors of R K L Lanka Electromechanical Works Contracting LLC, based in Dubai, visited Vivekananda College of Technology (VCOT), Puthukudiyiruppu. During their visit, they explored the educational, vocational training and youth empowerment initiatives carried out by the College and Vivekananda Community Foundation (VCF). They also learned about the College’s activities and its contributions towards community development.

Vivekananda Community Foundation has been implementing various development initiatives in Mavilangathurai village, located within the Manmunai Pattu Divisional Secretariat Division of Batticaloa District, with the aim of improving the educational, social and economic well-being of the rural community. Selected as a model village five years ago, Mavilangathurai has benefited from several initiatives, including additional language education for students, educational support and youth empowerment programmes.

As part of their visit to witness the Foundation’s community development activities, the directors visited Mavilangathurai village. With the objective of improving students’ computer literacy and information technology skills, four laptops were donated and handed over to the Principal of Mavilangathurai Vigneswara Vidyalayam. This contribution will facilitate the establishment of a dedicated IT learning unit at the school, in line with the initiative “Computer Learning Units in Villages” implemented by Vivekananda College of Technology, providing students with opportunities to develop essential digital skills.

This valuable contribution will help bridge the digital learning gap among rural students by providing greater access to modern technological education, thereby supporting their future educational and career opportunities.

Following the visit, the directors also visited Puhalidam, a centre serving children with special needs in the Manmunai Pattu area. Considering the nutritional well-being of the children receiving care at the centre, nutritional support packs were distributed to them.

Vivekananda Community Foundation and Vivekananda College of Technology extend their heartfelt appreciation and gratitude to Mr. Rizan Mansoor and Mr. Nallathamby Uthayakumar for visiting our community initiatives, witnessing our work firsthand and extending their valuable support towards our efforts to empower communities and create better opportunities for those in need.

Similar Posts