மனிதநேயம் சமுதாயக் கல்லூரிக்கு கேக் தயாரிப்பு உபகரணங்கள்

கரடியனாறு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மனித நேயம் சமுதாயக் கல்லூரியானது அப்பிரதேசத்தின் தேவைகளுக்கேற்ப தமது பயயிற்சி நெறிகளை வடிவமைத்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் பெண்கள் தலைமை தாங்கம் குடும்பங்கள் மற்றும் தேவைப்பாடுடைய பயிலுனர்களுக்கமைவாக கேக் தயாரிப்புப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கான உபகரணங்கள் தேவையாக இருந்நது.

அந்த நிலையில் கடந்த மாதம் மனிதநேய நிதியத்தின் ஏற்பாட்டில், அமெரிக்காவின் புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத் தலைவரும் வலையமைப்புப் பொறியியலாளருமான திரு.ஸ்ரீகணேசன் அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளாகங்களுக்குக் கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து மனித நேயம் சமுதாயக் கல்லூரிக்கு விஜயம் செய்த அவர் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சி தொடர்பில் கலந்துரையாடியதோடு நின்றுவிடாமல் இதனை நிவர்த்தி செய்யுமுகமாக கேக் தயாரிப்பு பயிற்சி உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து எமது அறக்கட்டளையினூடாக கேக் தயாரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வுபகரணங்கள் மனித நேயம் சமுதாயக் கல்லூரியில் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

Cake-Making Equipment for Manitha Neyam Community College

The Manitha Neyam Community College, which is being operated in the Karadiyanaru region, is noteworthy for designing and conducting its training programmes in accordance with the specific needs of the local community. In this regard, a cake-making training programme was initiated and conducted to support women-headed households and trainees from underprivileged backgrounds. However, there was a need for the necessary equipment to facilitate the programme effectively.

In this context, last month, under the arrangements of the Manitha Neyam Trust, Mr.Sriganesan, President of the Florida Sri Lankan Tamil Association in the United States and a Network Engineer, visited the colleges of the Vivekananda College of Technology. Following this visit, he also visited the Manitha Neyam Community College, where he held discussions regarding the ongoing training programmes. Going beyond merely discussing the challenges faced, he pledged to provide the necessary cake-making training equipments to address the existing needs.

Subsequently, through our Foundation, cake-making equipment and other related accessories were procured and provided to the Community college. These items were officially handed over to the Manitha Neyam Community College by our Executive Director, Mr.K.Pratheeswaran.

Similar Posts