அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு நன்கொடையாளர்களின் விஜயம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி. தேவி மற்றும் திரு. பாலச்சந்திரன் ஆகியோர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு, நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் போது, அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தற்போதைய வளர்ச்சி, மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் கல்விக்கு அப்பாற்பட்ட இணைப்பாடவிதான மற்றும் திறன் மேம்பாட்டு செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், மாணவிகளின் கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வரும் ஆதரவுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் செயற்பாடுகளுக்கு வழங்கி வரும் ஆதரவிற்கும் சேவைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், திருமதி. தேவி மற்றும் திரு. பாலச்சந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு இவ்வாறான ஆதரவுகளும் நேரடி விஜயங்களும் தொடர்ந்தும் ஊக்கமளிப்பதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Donor Visit to Annai Sri Sarada Centre in Puthukkudiyiruppu

Following their visit to the Vivekananda College of Technology, Mrs.Devi and Mr.Balachandran from Australia visited the Annai Sri Sarada Centre in Puthukkudiyiruppu, Mullaitivu, where they observed the activities of the centre and the educational activities of the students.

During the visit, discussions were held on the current development of Annai Sri Sarada Centre, the students’ learning activities, and opportunities to encourage them to actively engage in extracurricular and skill-development activities beyond their formal education.

Views were also exchanged on the support currently being provided for the students’ education and personal development, the activities that should be undertaken in the future, and the further development of the centre.

In recognition of their continued support and services to the activities of Annai Sri Sarada Centre, Mrs. Devi and Mr. Balachandran were honoured on the occasion.

It is noteworthy that such support and direct visits continue to serve as a source of encouragement to Annai Sri Sarada Centre, which works towards improving the education and quality of life of students from underprivileged communities.

Similar Posts